பக்கம்:புது டயரி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடைப் புராணம்

17

 முன்பு அவன் சொன்னதைப் பார்த்தால் ஒரு நாள் முழுவதும் இதே வேலையாக இருக்க வேண்டும் போலத் தோன்றியது. இப்போது ஒரு மணியில் செய்து தருகிறேன் என்கிறானே!

“அதெல்லாம் சரி. முன்பே கூலி பேசிக்கொண்டால் உனக்கும் நல்லது; எனக்கும் நல்லது.”

“நாலு கொடையிலும் புதுசாக் கம்பி போடணும். கம்பிகளைக் கோத்த ஒயர் ஒடிஞ்சு கெடக்குது. எல்லாத்தையும் களட்டிட்டுச் சரிப்படுத்திக் கோத்து வச்சுத் தைக்கணும். கிளிசலுக்கு ஒட்டுப் போடணும். இப்ப கம்பி விக்கிற வெலை எசமானுக்குத் தெரியாதா? கொடைத் துணி ஸ்பெஷல் துணியுங்க. நான் கடைலே வாங்கித் தான் வரதுங்க. பழைய கொடைத் துணியை வச்சுக்கறதில்லைங்க.”

அவனேப் பேசவிட்டால் நான் குடையையும் சரிபண்ண முடியாது, அலுவலகத்துக்கும் போக முடியாது என்றெண்ணி, “சரி, சரி, அந்தக் கதையெல்லாம் எனக்கு வேண்டாம். இந்த நாலு குடையும் ரிப்பேர் பண்ண என்ன கேட்கிறாய்” என்று கேட்டேன்.

“எசமான் கோவிச்சுக்கப்படாதுங்க, வேலையோட கஸ்டம், சாமான்களோட வெலை நெலவரம் எல்லாம் பாத்துத்தானே கூலி சொல்லனுமுங்க நான் என்ன ஆன வெலயா கேக்கப் போறேனுங்க?”

“நீ ராமாயணம் அளக்கிறதாக இருந்தால் அதைக் கேட்க எனக்கு நேரம் இல்லை. இப்போதைக்கு இரண்டு குடைகளை மட்டும் சரி பண்ணித் தா” என்று சொல்லி இரண்டு குடைகளை எடுத்து வைத்துக் கொண்டேன்.

“அதையும் இப்படிக் குடுங்க. இதோ ஆரை அவாிலே எல்லாம் முடிச்சுத் தர்ரேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/24&oldid=1149416" இலிருந்து மீள்விக்கப்பட்டது