பக்கம்:புது டயரி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

புது டயரி


“ஏய் என்ன இது இதைத் தைக்கவில்லையா?” என்று கூச்சல் போட்டேன். அவள் வந்தாள். நேற்றுக் கைக்காரியம் ஒழியவில்லை. இது என்ன, அஞ்சு நிமிஷ வேலை. நீங்கள் வைத்து விட்டுப் போங்கள். தைத்து வைக்கிறேன்” என்றாள்.

“நான் இதையும் எடுத்துக்கொண்டு போகிறேன். சாயங்காலம் வந்து கொடுக்கிறேன்; தைத்துவிடு” என்று சொல்லி இரண்டு குடைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

அன்றைக்கென்று மழையே இல்லை. அலுவலகத்துக்குப் போனேன். க்ண்பர்கள், “இது என்ன ஸார், இரண்டு குடை?” என்று கேட்டார்கள். “ஒன்று ஸ்டெப்னி” என்று சொல்லிவைத்தேன்.

மாலையில் வீடு திரும்பியபோது இரண்டு குடைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். சிறிது துாற்றல் வந்தது. ஒக்கப் பண்ணின குடையை விரித்தேன். மளுக்கென்று சத்தம் கேட்டது. ஒரு கம்பி உடைந்துவிட்டது. கிழவன் சொன்னது சரியென்று பட்டது. இது நாலாவது கம்பி. கடவுளே என்று அதை மடக்கித் துணி தூக்கிக் கொண்ட குடையைப் பிடித்துக் கொண்டு பஸ்ஸைப் பிடித்து வீட்டை அடைந்தேன்.

“இந்தா, இதை இப்போதே தைத்துக் கொடு” என்று என் மனைவியிடம் சொன்னேன்.

“ஏன்? ரிப்பேரான குடை என்ன ஆயிற்று” என்று கேட்டாள் அவள்.

“நாலாவது கம்பி உடைந்து போயிற்று; கிழவன் சொன்னது சரி” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/27&oldid=1149421" இலிருந்து மீள்விக்கப்பட்டது