பக்கம்:புது டயரி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாவது

65


வேகவைத்து டீ கொண்டு வா’ என்றார். அவன் அது ஏதோ கீரையென்று எண்ணி அதை நன்றாக வேகவைத்துத் தண்ணீரை இறுத்துவிட்டு வெறும் இலையைக் கொண்டு வந்தான். செல்வருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘அட முட்டாள்! இதன் தண்ணிர் அல்லவா வேண்டும்?’ என்று சொல்லி மறுபடியும் சிறிது தேயிலையை எடுத்துக் கொடுத்தார். அவன் அதை வேகவைத்துத் தண்ணீரை இறுத்துக் கொண்டு வந்தான்.

அப்போது அந்தச் செல்வர் தாம் வைத்திருந்த சுருட்டைப் பற்றவைத்துப் புகை பிடித்துக் கொண்டிருந்தார். வேலைக்காரன் புகை பிடிப்பதையே பார்த்ததில்லை. தன் எசமானன் முகத்தில் தீயும் புகையும் எழுவதைக் கண்டவுடனே பயந்து போய்த் தான் கொண்டுவந்திருந்த தேனீரை அந்தத் தீயை அனைபதற்கு அவர் முகத்தில் கொட்டிவிட்டானாம்!

ஆகவே, முதல் முதலாகப் புகை பிடிக்கத்தான் அந்த இலை உபயோகப் பட்டிருக்கவேண்டும். அப்படிப் பிடிக்கிறவர் சுருட்டை வாயில் வைத்துக் குடிக்கும்போது அதன் சுவை தட்டுப்பட்டிருக்கவேண்டும். அதன் சாரம் உள் இறங்குகையில் உண்டான கிளுகிளுப்பை அவர் அநுபவித்திருப்பார். பிறகு புகையிலையின் சாரத்தை நுகரும் வழக்கத்தை மேற்கொண்டிருப்பார். அவரைப் பார்த்து மற்றவர்களும் புகையிலைப் பிரியர்கள் ஆகியிருக்க வேண்டும்.

புகையிலை போடுபவர்களே மற்ற இரண்டு வகையினரைவிட — அதாவது பொடி போடுபவர்கள், புகை பிடிக்கிறவர்கள் என்பவர்களை விட — ரசிகர்கள் என்று சொன்னேன். தக்க காரணம் இல்லாமல் அப்படிச் சொன்னதாக எண்ணாதீர்கள். ரசத்தை அறிபவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/72&oldid=1150252" இலிருந்து மீள்விக்கப்பட்டது