பக்கம்:புது டயரி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

புது டயரி

 ஆனாலும் இதமாக இருந்ததை உணர்ந்தேன். அந்த விறுவிறுப்பை விரும்பினேன்.

மறுநாள் பல்வலி இல்லை. என்றாலும் புகையிலையின் விறுவிறுப்பில் ஆசை உண்டாகி விட்டது. புகையிலையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்; சிறிதளவுதான். விறுவிறுப்பை அநுபவித்தேன். அதிகமான விறுவிறுப்பை அவாவியது என் வாய். இதுவோ குறைந்திருந்தது.மறுநாள் இருமுறை புகையிலையைப் போட்டேன். விறுவிறுப்புக் குறைந்து கொண்டு வந்தது. அப்போது எனக்கு ஒர் யோசனை வந்தது. ‘இதை இந்த விறுவிறுப்புக்காகத்தானே போடுகிறோம் இதுவோ நாளாக ஆக விறுவிறுப்புக் குறைந்து கொண்டு வருகிறது. இன்னும் நாள் போனால் நாம் விரும்பும் அளவுக்கு இதில் விறுவிறுப்பு இருக்காது. நாம் எதிர்பார்க்கும் விறுவிறுப்பு இல்லாமல் போனால் இதைப்போட்டுப் பயன் என்ன? ஆகவே இதை விட்டுவிடுவோம்’ என்று எண்ணி அதோடு விட்டுவிட்டேன்.

புகையிலைக் காதலனாக மாறும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.

புகையிலையைப்பிரம்மபத்திரம் என்று சொல்கிறார்கள். நாலாவது என்று சொல்வதற்குக் காரணம் தெரிகிறது. பிரம்மபத்திரம் என்பதற்குக்காரணம் தெரியவில்லை. நானே ஒரு கற்பனை பண்ணினேன். கதையாகவே விரித்து எழுதியிருக்கிறேன். அதன் சுருக்கம் இதுதான்.

கலைமகள், திருமகள், மலைமகள் மூவரும் ஆகாய கங்கையில் நீராடிவிட்டு அருகிலுள்ள நந்தவனம் சென்றார்கள். அங்கே உமாதேவி வில்வம் எடுக்க, திருமகள் துளசியைக் கொய்ய, கலைமகள் சும்மா இருந்தாள். “நீ உன் கணவனுக்குரிய பத்திரம் எடுக்கவில்லையோ?” என்று கலைமகளை மற்றவர்கள் கேட்க, “அப்படி ஒன்று என் கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/77&oldid=1150811" இலிருந்து மீள்விக்கப்பட்டது