பக்கம்:புது டயரி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

புது டயரி


‘என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன உதாரணம் சொன்னால் விளங்கும். நம்முடைய வீட்டில் பெண்மணிகள் சமைக்கிறார்கள் தராசு, சமையல் புத்தகம் இவற்றை வைத்துக்கொண்டு அவர்கள் சமைப்பதில்லை. வீட்டில் ஆறு பேர் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய சமையல் நடைபெறும். அவர்களுடைய கைதான் தராசு. புளியானாலும் உப்பானாலும் அளவாகப் போட அவர்களுக்குத் தெரியும். உப்புப் போட்டுவிட்டுச் சரியாக இருக்கிறதா இல்லையா என்று வாயில் விட்டுப் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். இப்போது, சில படித்த பெண்கள் அப்படிப் பண்ணுகிறதாகக் கேள்வி!

ஆறு பேருக்குச் சமைக்கும் பெண்மணி, வீட்டில் ஏதாவது விசேஷமென்றால் பல வகையான உணவு வகைகளைச் சமைக்கிறாள். அறுபது பேருக்குச் சமைக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதும் அவளுடைய கையே உப்பை நிதானம் அறிந்து போடுகிறது. அவளிடம் உள்ள உள்ளுணர்வே எல்லாவற்றையும் அளவாகப் போடும் காரியத்தைச் சாதிக்கிறது.

இதைவிடப்பெரிய ஆச்சரியம் சமையற் கலையில் இருக்கிறது. பதினாயிரம், இருபதினாயிரம் பேருக்குச் சாப்பாடு போடவேண்டும். நூறு சமையற்காரர்களுக்கு மேல் வேலை செய்வார்கள். அவர்களுக்குள் தலைமைச் சமையற்காரர் ஒருவர் இருப்பார். அவர் அடுப்படிக்கே வரமாட்டார். அடுப்புக்கு முப்பது கஜ தூரத்துக்குமேல் அரிசி மூட்டையாகிய சிங்காதனத்தின்மேல் அமர்ந்து வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டிருப்பார்.

அடுப்படியில் அவருடைய தொண்டர்கள் வேலைசெய்து கொண்டிருப்பார்கள்.அடுப்பில் ரசம் கொதிக்கும். அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/87&oldid=1151055" இலிருந்து மீள்விக்கப்பட்டது