பக்கம்:புது டயரி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்பதும் ஒரு கலை

85

 மகிழும்படி, நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள். மடாலயத்தின் தலைவரிடமும் சொல்லி நன்றியறிவு கூர்வார்கள்.

சிவஞான முனிவரிடம் ஒரு தவசிப்பிள்ளை இருந்தான். அவர் அவனிடம் இன்ன இன்னபடி சமையல் செய்ய வேண்டுமென்று சொல்வாராம். அப்படிச் சொன்னதாக ஒரு பாட்டுக்கூட இருக்கிறது.

சற்றே துவையல்அறை; தம்பிஒரு பச்சடிவை;
வற்றல்ஏ தேனும் வறுத்துவை;-குற்றம்இலை;
காயம்இட்டுக் கீரைகடை; கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி.

சமையல் பண்ணியதை நன்றாக அநுபவித்தால்தான் செய்தவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்று சொன்னேன். முன்னே சொன்ன சேஷையாசாஸ்திரியார் ஒரு முறை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்திருந்தார். அப்போது அம்பலவாண தேசிகர் என்பவர் ஆதீனகர்த்தராக இருந்தார். அவர் கலைகளை நன்கு சுவைக்கும் ரசிகர். சாஸ்திரியார் வந்தபோது அவருக்குப் பெரிய விருந்து போட வேண்டுமென்று நினைத்தார். எங்கும் பார்த்திராதவகையில் காய், கறி, குழம்பு, ரசம், பட்சியங்கள் பலபல செய்ய ஏற்பாடு செய்தார். கறி கூட்டு வகைகளே நூறு இருக்கும். துவையல்களில் இருபது. மற்றவற்றிலும் இப்படியே.

சாஸ்திரியார் பருத்த சரீரமுடையவர். முன்னே இலை போட்டுக் குனிந்து சாப்பிட அவரால் முடியாது. நீளமான திண்ணையில் மிகவும் நீளமான இலையைப் போட்டு அதில் எல்லாவற்றையும் பரிமாறினார்கள்.சாஸ்திரியாருக்குப் பக்கவாட்டில் திண்ணயிருக்கும்படி அருகில் ஒரு நாற்காலி போட்டு உண்ணச் செய்தார்கள். இரண்டு பேர் கையில் ஸ்பூன்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பதார்த்தத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/92&oldid=1151076" இலிருந்து மீள்விக்கப்பட்டது