பக்கம்:புது டயரி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

புது டயரி

 ஆங்கிலத்தில் பெயர். அதைச் செருக ஒரு குவளை; அதைச் செருக ஒரு கட்டை. இப்படி மூன்று அங்கங்களோடு உருவான எஃகுப் பேனாவை மைக்கூட்டில் தோய்த்து எழுதினார்கள். எழுதுகோல் எழுத்தாணியாக இருந்தது மாறிப் பேனாவாயிற்று. பேனா என்று ஆங்கிலத்தில் வழங்குவதையே நாம் பேனா என்று அழகிய தமிழ் வடிவம் கொடுத்து வழங்கிவருகிறோம்.

பேச்சு, எழுத்து ஆகிய இரண்டும் இனமானவை. அழகாகப் பேசுவது, அழகாக எழுதுவது இரண்டும் கல்வித் திறமையுடையவர்கள் செய்கிற காரியம். பேசுவதற்கு உதவுவது நா; எழுதுவதற்கு உதவுவது பேனா. பேசும் திறமையுள்ளவர்களை நாவலர் என்று சொல்கிறோம்; எழுதும் ஆற்றல் உள்ளவர்களைப் பேனாவலர் என்று சொல்ல லாம் அல்லவா? பென்னைப் பேனாவாகத் தமிழில் ஆக்கிக் கொண்டதனால் இப்படி நயம்படச் சொல்ல முடிகிறது. யாழ்ப்பாணத்துக்காரர்கள் பேனா என்று சொல்கிறதில்லை; பேனை என்றுதான் சொல்வார்கள். பென்னிலிருந்து பேனா வந்து, பேனாவிலிருந்து பேனை வந்திருக்க வேண்டும்.

எஃகுப் பேனாவுக்கு ஜோடி மைக்கூடு. அந்தக் காலத்தில் கடுக்காய் மையை அவரவர்களே தயாரித்துக் கொள்வார்கள். அது நல்ல கறுப்பாக இருக்கும். நன்றாக எழுதுகிறவர்கள் அந்த மையில் எழுதினால் அச்சுப் போலவே இருக்கும். மைப் பவுடர் வாங்கி மை கரைத்துக் கொள்வார்கள். மைவில்லையும் இருந்தது. அந்த மையினால் எழுதினால் எவ்வளவு பளிச்சென்று இருக்கும் இப்போது மைகள் வருகின்றனவே, எல்லாம் அழுது வடிகின்றன!

கணக்குப் பிள்ளைகள் எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை கூடிக் கணக்குகளைச் சரிபார்த்து எழுதுவார்கள். அதற்கு ஜமாபந்தி என்று பெயர். அப்போது ஒரே மைக் கூட்டை நடுவில் வைத்துக்கொண்டு பல பேர் தம் பேனாவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/99&oldid=1151473" இலிருந்து மீள்விக்கப்பட்டது