பக்கம்:புது மெருகு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

புது மெருகு

வேதனையைக் கிளப்பியது. வேகத்தையும் உண்டாக்கியது.

அவருடைய அதிகாரத்துக்குச் சொல்ல வேண்டுமா? ஆட்கள் ஓடினார்கள். சிறைச்சாலைக்குச் சென்று சம்பந்தச் சர்க்கரைக்கு ஆசார உபசாரங்கள் செய்து தளவாயினிடம் அழைத்துவந்தார்கள்.

"அடடா! உம்முடைய பெருந்தன்மையை இவ்வளவு காலம் நான் அறிந்துகொள்ளவில்லையே. தமிழுக்குத் தாலி கொடுக்கும் தாதாவை நான் சிறையில் அடைத்தது பிழை" என்று அவரை ராமப்பையர் வரவேற்றார்.

"எல்லாம் விதியின் செயல்" என்று சுருக்கமாகப் பதில் வந்தது.

தளவாயும் வள்ளலும் அளவளாவிப் பேசினர். "உம்முடைய செயல் என் மனத்தை உருக்கிவிட்டது. வரியை உமக்குச் சௌகரியமானபோது கட்டலாம். உமக்கு ஏதாவது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்" என்றார் தளவாய்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம். உங்கள் தயை இருந்தால் போதும். ஒரே ஒரு வேண்டுகோள்; அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்."

"என்ன, என்ன?"

"என்னுடன் சிறையில் இருந்த பாளையக்காரர்களும் காணியாளர்களும் மானமுள்ளவர்கள். கால வேற்றுமையால் அவர்கள் வரி கட்ட இயலவில்லை. நல்ல காலம் வந்தால் கரவின்றி வரியைக் கட்டிவிடுவார்கள். அவர்களையும் விடுதலை செய்யும்படி உத்தரவாக வேண்டும். என்னை மட்டும் விடுதலை செய்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/109&oldid=1549619" இலிருந்து மீள்விக்கப்பட்டது