பக்கம்:புது மெருகு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூங்கோதை

111

வந்தது. அவர்களுக்கு எதிரே சென்று அவர்கள் வாயை அடக்க வேண்டுமென்று ஆத்திரம் பொங்கியது. ஆனாலும் இயல்பாக இருந்த நாணம் மிஞ்சியது. திண்ணைப்பேச்சில் பெண்ணைப் பழிக்கும் படலம் இன்னும் முடிந்த பாடில்லை. 'ஏதாவது ஓர் உபாயம் செய்து தான் தீரவேண்டும்' என்று துணிந்தாள் அந்தத் தமிழ் மங்கை.

சிறிதுநேரம் யோசித்தாள். ஒரு சிறிய ஓலையையும் எழுத்தாணியையும் எடுத்தாள். என்னவோ எழுதினாள். ஒரு குழந்தையைக் கூப்பிட்டு, "இந்தா, இதைக் கொண்டுபோய்த் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்களிடம் கொடு" என்றாள்.

குழந்தை அப்படியே அதைக் கொண்டுபோய்த் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்களுக்குள் ஒருவர் கையில் கொடுத்தது.

அதை அவர் பார்த்தவுடனே அவர் முகம் மங்கியது. ஓலையை மற்றொருவர் பார்த்தார். அவர் பேச்சு நின்றது. ஒவ்வொருவராகப் பார்த்தார்கள். எல்லோரும் திடுக்கிட்டு, ஸ்தம்பித்து, மௌனமானார்கள்.

ஓலையில் என்ன இருந்தது? பூங்கோதை அவர்களை வைது ஒன்றும் எழுதவில்லை; 'நீங்கள் இப்படிப் பெண்ணினத்தை அவமதிப்பது தவறு' என்றும் எழுதவில்லை. ஆனால் ஒரு வெண்பாவை எழுதி அனுப்பினாள்.

'ஆண்மக்கள் பெண்களைக் காட்டிலும் அறிவில் தாழ்ந்தவர்கள்' என்று அந்தக் கவி சொல்லியது.

"அறிவில் இளைஞரே ஆண்மக்கள்" என்ற முதலடியே அவர்களைத் திடுக்கிடச் செய்தது. இவ்வளவு நேரம் பேசிக்கொண் டிருந்தபோது அவர்கள் சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/116&oldid=1549634" இலிருந்து மீள்விக்கப்பட்டது