பக்கம்:புது மெருகு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றுகை

25

லுமா? வயிற்றுக்கில்லாமல் சாகும் நிலை யாருக்கும் வராது. ஆனாலும் சுவையற்ற உணவைத் தின்பதில் உண்டாகும் அருவருப்பைத் தடுக்க முடியவில்லை.

பாரியும் கபிலரும் படைவீரரும் ஒவ்வொரு நாளும் கூடிக் குடிமக்களுக்கு வேண்டிய வகசதிகளைச் செய்து வந்தனர். உணவுப் பொருள்களை அரண்மனையிலே சேமித்து வைத்து அவர்களுக்கு அளித்தனர்.

மலைவளத்தையும் மலைவிளை பொருள்களின் இயல்பையும் நன்கு உணர்ந்த கபிலர் எந்த எந்தப் பொருளை உணவாகக் கொள்ளலாம் என்பதை அநுபவத்தால் தெரிந்து வைத்திருந்தார். இயற்கையின் எழில் நலங்களையும், இயற்கைப் பொருள்களின் இயல்புகளையும் தீர ஆராய்ந்து தெரிந்திருந்த அவருடைய யோசனையால் பறம்பு மலைமேல் உள்ளவர்களுக்கு உணவுக் குறை ஒன்றும் உண்டாகவில்லை.

ஒரு நாள் பாரியும் கபிலரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்:

"பாரிவேளே, கீழே முற்றுகையிட்டவர்கள் வெளியிலிருந்து உணவு நமக்குக் கிடைக்கக் கூடாதென்று எண்ணியிருக்கிறார்கள். வெளியிலிருந்து உணவுப்பொருள் வராவிட்டாலும் நாம் சுகமாக உயிர் வாழ்வோம் என்பதைத் தெரிவித்து விட்டோம். அது போதாது. அவர்கள் எண்ணத்திற்கு மாறாக, அவர்களுடைய முற்றுகைக்கு மீறி வெளியிலிருந்து நமக்கு உணவுப்பொருள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் " என்றார் கபிலர்.

"அது எப்படி முடியும்? பறம்பு மலைமேல் யாரும் வர முடியாதபடி நாம் வாயில்களை அடைத்திருக்கிறோம். அவர்களும் சூழ நிற்கிறார்கள். வேடம் புனைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/30&oldid=1548625" இலிருந்து மீள்விக்கப்பட்டது