பக்கம்:புது மெருகு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யமன் வாயில் மண்

39

திலகரே ஒலம்! கோவூர்கிழாரே ஓலம்!' என்று கதறினான்.

கோவூர்கிழார் காதில் இந்தப் புலம்பல் பட்டது. அவர் நின்றுவிட்டார். விஷயத்தை விசாரித்தார். இளந் தத்தனை அணுகிப்பேசினார். "யாதொரு பாவமும் அறியாதவன் நான். என்னை ஒற்றனென்று கொல்லப்போகிறார்கள்."

அறிவிற் சிறந்த அப்பெரியார் அவனோடு சில கணம் பேசினார்.'உண்மையில் அவன் புலவன் தான்' என்பதை உணர்ந்துகொண்டார். இனம் இனத்தை அறிவது இயல்புதானே?' என்ன காரியம் இது? பெரிய பாதகச் செயலுக்கு இவ்வரசன் உள்ளாகி விட்டானே! இந்த இளம் புலவன் குற்றமின்றியே கொலைப்படுவதா?" என்று நினைத்தபோது அவர் உடல் நடுங்கியது. கொலையாளிகளைப் பார்த்து," சற்றுப் பொருங்கள். இவரை நான் அறிவேன். இவர் ஒற்றர் அல்ல. மன்னனிடம் இதைப் போய்ச் சொல்லி வருகிறேன்" என்று கூறிவிட்டு விரைவாக அரண்மனையை நோக்கி நடந்தார்.

யமன் வாயை நோக்கிச் சென்ற கவளம் அந்தரத்திலே நின்றது.

"அரசே, அந்தப் புலவர்களின் பெருமையை நான் என்னவென்று சொல்வேன்!" என்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார் கோவூர்கிழார்.

"அதில் என்ன சந்தேகம்? புலவர்களால்தான் எங்களுடைய புகழ் நிலைநிற்கிறது" என்று ஆமோதித் தான் நெடுங்கிள்ளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/44&oldid=1548900" இலிருந்து மீள்விக்கப்பட்டது