பக்கம்:புது மெருகு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

புது மெருகு

சொன்னது பொய்' என்றாலோ, ஒருவன் உயிரைப் பாதுக்காக்கச் சொன்ன அச் சொல்லைக் காட்டிலும் வாய்மை வேறு உண்டோ?

"பொறுத்தருள வேண்டும் நான் செய்தது பிழை....யர் அங்கே! ஓடுங்கள். இளந்தத்தரை விடுவித்து அழைத்து வாருங்கள்...ஆசனம் கொண்டு வாருங்கள்... என்ன பாதகம் செய்தேன்! அபசாரம்! அபசாரம்! ...பகைமை இருள் என் கண்ணை மறைத்துவிட்டது.. உங்களால் நான் அறிவு பெற்றேன்." - அரசன் வார்த்தைகள் அவன் உணர்ச்சியைக் காட்டின. அச்சமும் பச்சாதாபமும் துள்ளின அவன் வாக்கில்.கோவூர்கிழார் முகத்தில் ஒளி புகுந்தது. இளந்தத்தன் உடம்பில் உயிர் புகுந்தது. யமன் வாயில் மண் புகுந்தது. இந்த நிகழ்ச்சியை அறிந்த உலகத்தார் உள்ளத்தில் வியப்புப் புகுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/47&oldid=1548903" இலிருந்து மீள்விக்கப்பட்டது