பக்கம்:புது மெருகு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிர்வாண தேசம்

[குறிப்பு;—சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் ஒரு பெரிய நகரமாக இருந்தது. அங்கே கரிகாலன் காலத்தில் கப்பல் வியாபாரம் எவ்வளவோ சிறப்பாக நடந்துவந்த தாம்.கலங்கரை விளக்கம்,சுங்கமண்டபம் முதலிய இடங்கள் அங்கே இருந்தனவாம். இப்போது உள்ள காவிரிப் பூம்பட்டினத்தில் மீன்படகையும் வலைஞர் குடிசைகளையுமே பார்க்க முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப் பட்டினம் இருந்த நிலைமையைப்பற்றிச் சங்க காலத்துத் தமிழ் நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.அந் நகரத்தில் இருந்த ஒரு வணிகனைப்பற்றி "மணிமேகலை " என்னும் காவியத்தில் கண்ட வரலாறு ஒன்று பின் கண்ட கதைக்கு ஆதாரம்.]

யற்கைக்குப் பிசாசுதான் பிடித்துவிட்டதோ? சண்ட மாருதம் உலகத்தையே சுழற்றி அடிக்கிறது. அலைகள் மலைகளைப்போலக் குமுறி எழுகின்றன. கப்பலை அம்மானையைப்போல மேலே தூக்கி எறிகிறது கடல். கப்பலில் உள்ளவர்கள் யாவரும் கதிகலங்கி உயிருக்கு மன்றாடிக் கத்துகிறார்கள். அந்தப் பெரும் புயலின் முழக்கத்தில் அவர்களுடைய புலம்பல் யாருக்குக் கேட்கப்போகிறது?

"படார்! படீர்! பட்!" என்ற சப்தம்; கப்பல் உடைந்துவிட்டது."ஐயோ! அப்பா! அம்மா!" என்ற ஒலிகள் அதற்குள் இருந்த சிற்றுயிர்களின் உயிராசையை வெளிப்படுத்தின. கரையில்லாமற் படர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/63&oldid=1549150" இலிருந்து மீள்விக்கப்பட்டது