பக்கம்:புது மெருகு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிர்வாண தேசம்

65

அவன் வெறும் பழங்களை மாத்திரம் உண்டு பசி யாறியதைப் பார்த்தபோது நாக சாதியினருக்குப் பெரு வியப்பாக இருந்தது.

எவ்வளவோ கப்பல்களின் பாய்மரங்களும் உடைந்த பகுதிகளும் அந்தத் தீவில் சிதறிக் கிடந்தன. அக் கப்பல்களில் வியாபாரிகள் ஈட்டி வந்த மணியும் பொன்னும் மற்றப் பொருள்களும் நாகரிகமற்ற அந்தத் தீவிலே தீண்டுவாரற்றுக் கிடந்தன. அவைகளை என்ன செய்வதென்பதையே அந்த முரட்டுப் பிராணிகள் அறியார்கள்.

சாதுவன் அந்தக் குவியல்களை மூட்டை கட்டிக் கொண்டான். தினந்தோறும் கடற்கரைக்குப் போய், ‘ஏதாவது கப்பல் வராதா?’ என்று பார்த்துப் பார்த்து ஏங்கி நின்றான். கடைசியில் ஒரு நாள் வந்த கப்பலொன்றைக் கூவி அழைத்து அந்தக் கப்பல் நிறைய மணியையும் பொன்னையும் ஏற்றிக் கொண்டான். நாகர்களின் அரசன் வழி அனுப்பினான்; மீண்டும் வரவேண்டுமென்று உபசரித்தான். சாதுவன் காவிரிப்பூம்பட்டினத்திற்கு ஒரு பெரிய கோடீசுவர னாகத் திரும்பினான்.

நாகர்களுக்கு அவன் செய்த உபதேசம் சில வாரங் களே இருந்தது. அப்புறம் அவர்களுடைய நாக்கு, பழைய பழக்கத்தைப் பிடித்துக் கொண்டது. பழைய படியே அவர்கள் நர மாமிசத்திற்குச் சப்புக் கொட்ட லானார்கள்.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/70&oldid=1549165" இலிருந்து மீள்விக்கப்பட்டது