பக்கம்:புது மெருகு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவரும் குருவும்

67

மாகப் பாடுவதென்று நிச்சயம் செய்தார் தேவர். ஆயினும் தம்முடைய குருவினிடம் சென்று அநுமதி பெற் றுப் பிறகே தொடங்க வேண்டுமென்பது அவர் எண்ணம். சீவகனது சரித்திரம் ஜைனர்களுக்குள் ராமாய ணம் போலப் பரவியிருந்தது. அதைக் கவிச் சுவை அமையப் பாடிவிடலாம் என்ற துணிவு தேவருக்கு உண்டாயிற்று.

குருவினிடம் போனார். "அடியேன் சீவகனது சரிதையைக் காவியமாகப் பாட எண்ணியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும்" என்று விண்ணப்பித்தார்.

துறவரசராகிய குருநாதர் தம் மாணாக்கரின் ஆற் றலை நன்கு உணர்ந்தவர். ஆனாலும் அவரைச் சோதிக்க எண்ணி, "பெருங் காவியம் செய்வதற்கு முன்பு சிறிய நூல் ஏதேனும் ஒன்றை இயற்றிப் பழகவேண்டும்" என்று சொன்னார். அங்ஙனம் சொல்லிக்கொண் டிருந்த போதே எதிரில் ஒரு நரி ஓடிற்று. உடனே ஆசிரியர் அதைச் சுட்டி, அதோ ஓடுகிறதே, நரி; அதை விஷய மாக வைத்து ஒரு சிறு நூல் இயற்று, பார்க்கலாம்" என்று கட்டளையிட்டார்.

திருத்தக்க தேவரின் தீவிரமான அறிவுக்கு அது ஒரு பெரிய வேலையா? மிக விரைவில் 'நரி விருத்தம்' என்ற சிறு நூலைப் பாடிக் காட்டினார். 'மனித வாழ்க்கை நிலையற்றது, செல்வம் நிலையற்றது' என்பன போன்ற உண்மைகளை விளக்கிக்கொண்டு நின்றது அந் நூல். அதைக் கண்ட ஆசிரியர் வியந்து பாராட்டினார். "இன்று நான் நரி முகத்தில் விழித்தேன்" என்று மகிழ்வுற்றார் திருத்தக்க தேவரும்.

"சீவகன் சரித்திரத்தைப் பாடும் தகுதி உமக்கு இருக்கிறது. நீர் சிறிதும் கவலையின்றிப் பாடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/72&oldid=1549175" இலிருந்து மீள்விக்கப்பட்டது