பக்கம்:புது மெருகு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

புது மெருகு

எவனால் உயிர்கள் அடைகின்றனவோ அவன் குணங்களெல்லாம் நிறைந்தவன், அக்குணங்களையே நிதியாக உடைய செல்வன் என்று சாதுக்கள் கூறுகின்றனர். அவனே தேவா திதேவன். அவனுடைய சேவடிகளை நாம் வணங்குவோம்' என்ற கம்பீரமான பொருளோடு விளங்கியது அப்பாடல்.

"மூவா முதலா உலகம்மொரு
        மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பந் தலையாயது
        தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச்
        செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன்சேவடி
        சேர்தும் அன்றே."[1]

[மூவா- அழியாத. முதலா-முதலில்லாத, தாவாத-கெடாத ஓவாது-நீங்காமல். சேர்தும்-சேர்வோம்]

அச் செய்யுளை இரண்டு மூன்று முறை சொல்லச் செய்து ஆசிரியர் கேட்டார். அதன் பொருளாழத்திலே அவர் உள்ளம் சென்று தங்கியது. 'ஜைன சமய உண்மைகளை இச் செய்யுள் எவ்வளவு நன்றாகச் சொல்கிறது! காமச் சுவை அமைந்த காவியம் இயற்றத் தொடங்கும்போதும் இவன் மனம் சிற்றின்பத்தின் நிலையாமையையும் பேரின்பத்தின் பெருமையையும் நினைத்துப் புகுகின்றதே. என் பாட்டு வெறும் உருவ வருணனை; இவன் பாடலோ அறிஞர்கள் அறிவுக்


  1. இச் செய்யுளின் உரையில் நச்சினார்க்கினியர், எய்தி என் பதனை எச்சத்திரிபாகக் கொண்டு பொருளுரைத்தார். இன்பந் தன்னினெய்தி உலகம் ஏத்த நின்ற செல்வனென்று கூட்டிப் பொருள் கொள்ளலாமென்று தோற்றுகின்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/75&oldid=1549180" இலிருந்து மீள்விக்கப்பட்டது