பக்கம்:புது வெளிச்சம்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெரிவித்தும் பிரகஸ்பதியின் தலைமையில் போராடினவர்களான பார்கஸ்பதர். அடுத்துத் தொடர்ந்து நீண்ட காலம் எதிர்ப்பு தெரிவித்தவர்கள், உலகாயதர். அதன்பிறகு சார்வாகர்ம் தலைமையில் அந்தப் போராட்டம் உச்சகட்டத்திற்குச் சென்றது. சார்வாகர் கேள்விகள் வேதியர்களை அயரச் செய்வதாயிருந்தது.

சார்வாகரின் பிரதான எதிர்ப்பு, அர்த்தமில்லாத வைதிக சம்பிரதாயங்களிலிருந்து மக்களை விடுவிப்பதாக இருந்தது. சார்வாகரால் தொடுக்கப்பட்டக் கேள்விகள் இவ்வாறிருந்தன. (பக்கம் 83 - 84).

"சுவர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. அதுபோலவே பரலோகத்துக்கு இங்கிருந்து போகும் ஆத்மாவும் இல்லை. பிரம்ம, சத்ரிய, வைசிய, சூத்திரர் எனப்படும் நான்கு வருணமும், பிரம்மச்சாரியமாகிய நான்கு ஆஸ்சிரமங்களும் எந்த ஒரு பயனையும் தரமாட்டாது. அக்னி ஹோத்திரம் (யாகங்கள்) வேத மந்திரங்கள், சந்நியாச வேசங்கள் எந்தப் பயனையும் அளிக்காது. நெற்றியில் பஸ்பம் (சாம்பல்) பூசிக் கொள்வது அறிவில்லாத பேடிகள் வாழ்க்கைக்கு உபாயமாகச் செய்துகொண்ட ஒரு தந்திரம் மட்டுமே”.

"சுவர்க்கத்துக்குப் போக ஜோதிஸ்டோமத்தைச் செய்யும் போது அதில் பலி கொடுக்கப்படும் ஆடோ, மாடோ, ஆமையோ, குதிரையோ சுவர்க்கமடைவது உண்மையெனின், யாகம் செய்யும் எஜமானன் தன் தந்தையையே யாகபசுவாகப் பலி கொடுத்து சுவர்க்கத்துக்கே அனுப்பி விடலாமே. ஏன் அவ்வாறு செய்வதில்லை.

"இறந்து போனவர்களைச் சிராத்தத்தினால் திருப்தியடையச் செய்ய முடியுமானால் வீட்டை விட்டுத் தொலைவில் பிரயாணம் செய்யும் தந்தை, தமயன்களின் பசி தாபங்களையும் சிராத்தத்தினால் ஏன் தீர்க்க முடியாது!’ என்பது போன்ற கேள்விகள் மிகப் பலவாயுள்ளன.

"வேலி முள்ளுக்கு கூர்மையான நுனியைக் கொடுத்தவன் யார்? கரும்புக்கு இனிப்பை அளித்தவன் எவன்? எலுமிச்சை பழம் புளிப்புச் சுவைக்கு அருகதையாக்கினவன் யார்? இவை அவ்வப்பொருள்களின் இயல்பு. ஆனால் எப்போதும் யார்

புது வெளிச்சம்

105