பக்கம்:புது வெளிச்சம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11


தியாகம்


'மகத்தானவை’ என நம்மை நினைக்கச் செய்யும் சொற்களில் இந்தத் தியாகம் எனும் சொல்லும் ஒன்று. தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள மிகப்பெரிய மருத்துவத்தை கேட்போர் உளத்தில் விளக்கமாக முழுதும் பதிய எடுத்துரைப்பதற்கு என்னைவிடப் பன்மடங்கு அறிவாற்றலும் மனிதாபிமானமும் அதிகமுள்ள ஒரு மகானால் தான் சாத்தியம் என்று முதலிலேயே சொல்லி வைக்கிறேன். இதில் நான் என்னைக் குறைத்து கூறுவது உண்மையைக் கூறியதே யன்றி வேறு எதுவொன்று மன்று.

இருண்ட வீட்டில் விளக்கேற்றி வைப்பதென்றச் சத்தியத்தை தன் உள்ளத்தில் ஒளிர வைத்துக் கொண்டுள்ள அச்சமறியாத

50 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்