பக்கம்:புது வெளிச்சம்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதியதாய் வரும் விருந்தினர் அதிதியைத் தெய்வமாகக் கொண்டிரு என்பதே.

இருந்ததை இருந்தபடி இந்த ஒரு கருத்தையும் கூட முழுமையாகத் தமிழ் மக்களுக்குத் தர மனமில்லாத, மனிதாபிமானம் அறவே அற்ற இந்த ஆச்சாரியர்களின் உள்ளம் எவ்வளவு வஞ்சகமானது, சுயநலமுள்ளது என்று இது வெளிப்படுத்தவில்லையா?

ஆரியக் கலப்படத்துக்கு முன் இருந்த ஒவ்வொரு திராவிடக் குடிமகனின் உள்ளமும் விருந்தோம்பலிலும், வீரத்திலுமன்றோ முகிழ்த்து மலர்ந்து முழுமை பெற்றிருந்தது.

'இல் விருந்து ஒம்பி வாழ்வ' தெதற்காக எனில் அது விருந்தோம்புதலாகிய வேளாண்மையைச் செய்தல் பொருட்டே தான் என்று தெளிவு படுத்துகிற தமிழ்வேதமாகிய திருக்குறள்.

'கூடியுண்ணும் குணத்தவர் கிளைபோல் நீடி’ என்கிறது கல்லாடம்.

புறநானூறின் புனிதத் தமிழ்மகள் செயல் இன்னும் ஒருபடி மேலுக்குப்போகிறது.

“அது ஒரு சிறிய ஊர். அந்தச் சிறிய ஊரில் இருந்தது ஒரே ஒரு சிறிய நீரூற்று. நீரூற்றைச் சுற்றிக் கழற்சிக் காய்செடிப் புதராய் மண்டிச் சூழ்ந்திருந்தது. முறைப்படி அந்த ஊரிலிலுள்ள மக்களனைவரும் விகல்பமின்றி வேற்றுமை பாராட்டாமல் வரிசைக் கிரமமாகச் சென்று அந்த நீரூற்றிலிருந்து தான் தண்ணீர் கொண்டு வந்து பாங்கும் பரிவுமாக எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. இரவு நேரங்களில் காட்டு யானைகள் எப்போதாவது வந்து நீர்பருகுவதன் நிமித்தம் போராடிக் கொள்வதும் உண்டு. சுனைநீர் சகதியாக மாறிப் போவதும் உண்டு. உடனே ஆவனசெய்து சண்டை சச்சரவின்றி வாழும் அம்மக்களின் தலைவனாக ஒரு ஆற்றல் பெருமகன் இருந்தான். அவன் ஒரு மாபெரும் வீரன். அஞ்சாநெஞ்சன் நீதிவழுவா நெறிமுறையினன். ஊரில் அவனே தலைவனாகவும் இருந்தான்.

தலைவனுக்கு ஒரு தலைவியும் உண்டு. அவளும் ஒரு வீராங்கனை. அவள் புகுந்த குடி மாண்புமிக்க அறம் வழுவாப்

68

கவிஞர் வெள்ளியங்காட்டான்