பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை ix

பாடுவதில் போதிய வன்மையில்லாத இளைஞர்கள் கூடச் சேரன் ஒருவனிடம் பரிசிலேப் பெறுகிருர்கள். 'இவர் களுடைய பாடல் வேறு இடங்களில் ஏருதவை. இருந்தாலும் இதைப் பாடிக் கை நீட்டும் இளேஞர்களுக்கு இவன் வசப்பட்டவணுகித் தான் கடற் போரில் ஈட்டிய பொருளைத் தருகிருனே! என்று அந்த ஈகையைக் கண்டவர்கள் பாராட்டுகிருர்கள். இரவலர் படும் துன்பத்தைக் கண்டு அஞ்சுவது மன்னர் இயல்பு. தம் மனேவிமாரின் ஊடலேக் கண்டு அஞ்சுவதைக் காட்டிலும் இரவலர் புன்கண்ணேக் கண்டு மிகுதியாக அஞ்சுவார்களாம்.

செல்வக்கடுங்கோ வாழியாதனேப் பாடும் கபிலர் ஆம் மன்னனுடைய இயல்புகளாகக் கூறும் செய்திகள் மிகச் சிறந்தவை. ஈயும் வள்ளலது உயர்ந்த மன நிலையை அவர் நுட்பமாக உணர்ந்து சொல்கிருர். தான் பகைவரை வென்று பெற்ற பொருள்களே அரசன் வழங்குகிருன். அந்தப் பொருள்கள் மதிப்பிலே பெரியவை. அவற்றைக் கொடுக்கிருன். கொடுத்த பிறகு, "இவற்றை நாம் வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விட்டோமே!” என்று நினைத்து வருந்த மாட்டாளும். இவ்வளவு கொடுத்து விட்டோமே!' என்ற எண்ணமும் கொள்வதில்லை.

கொடுப்பது எப்போதும் உயர்ந்த செயல். 'மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ என்று வள்ளுவர் சொன்ஞர். ஆதலின் கொடுக்கும் பொழுது, நாம் கொடுக்கிருேம் என்ற பெருமிதம் ஒருவனுக்கு உண்டாவது இயற்கை. இல்லே யெனில், நம்மால் கொடுக்க முடிந்ததே என்ற உவகையை யாவது அடையலாம். ஆளுல் சேரன் அத்தகைய நினைப் பையே கொள்வதில்லேயாம். எத்தனே தடவை ஈந்தாலும், "நாம் கொடுத்தோம்; நம் பிறவியும் பொருளும் பயன் பெற்றன" என்ற மகிழ்ச்சியே அவனுக்கு இருப்ப தில்லேயாம்.

கொடுக்குந்தோறும் அவனுடைய வள்ளன்மை இம்மி யளவும் குறைவதில்லை. ஒரு முறை பெற்றவனே பல முறை வந்தாலும் புதிதாக வந்தவனுக்கு வழங்குவது போலவே வழங்குவான். முன்பு பெற்றவன் என்ற காரணத்தால் பின்பும் வந்தவனுக்கு இல்லை யென்பதும், குறையக் கொடுத்