பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புது வெள்ளம்

மலையைச் சார்ந்த பறம்பு நாடு, எவ்வளவு வளம் பொருந்தியதாக இருந்தது !

அங்கே உள்ள பலா மரங்கள் நன்ருக வளர்ந்து பழுத்து நின்றன. யார் வேண்டுமானுலும் அதைத் தின்று பசியாறலாமே. உழவர் உழுது பயிர் இடாத விளைவு அது. அந்தப் பழம் கனிந்து வெடித்திருக்கும். உள்ளிருக்கும் செஞ்சுளை வெளியிலே தெரியும். பலாப் பழத்துக்குப் புண் வந்தது போல இருக்கும். பிளந்து வெடித்த புண்ணிலிருந்து தேன் அரித்து வீழும். வாடைக்காற்று வீசும்போது அந்தத் தேன் சிதறும் பழத்தையும் தேனையும் உண்டு அருவி நீரைப் பருகினல் பசி இருக்குமிடம் தெரியாமல் போய் விடுமே. பாரி பெருவிறலை யுடையவளுதலின் அவளுேடு பொர லரிது என்று முடியுடை மன்னரும் அஞ்சினர்.

அவனுக்கு வஞ்சி மா நகரத்தைப் போன்ற பெரிய இராசதானி இல்லை. பெரிய அரண்மனையும் இல்லை. ஆணுலும் அவன் மாளிகை அழகாகவே இருந்தது. அந்த நல் இல்லிலே அற்புதமான சிற்ப வேலைப்பாடு கள் அமைந்திருந்தன. ஒவ்வொரு பகுதியும்,அழகுடன் விளங்கியது. அந்த இல்லத்தை முற்றும் பார்த்தால் ஒரு முழுச் சித்திரம் போல, பல வண்ணக் கலப்புடன் பல உருவங்களுடன் இணைந்து இசைந்து அமைந்த ஒவியம் போல இருந்தது; ஒவத்து அன்ன வினைபுனே நல் இல்,

அந்த இல்லிலே தனியே அந்தப்புரமென்று , ஒன்று இல்லை. பலரை மணம் செய்து கொள்ளும் முடி மன்னர்களுக்கு மனைவிமார் பலர் இருப்பார்கள். மந்தையை அடைக்கும் பட்டி போல அந்தப்புரம் அவர் களுக்கு வேண்டும். பாரி கற்புடைய மனைவி ஒருத்தி