பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 00 புது வெள்ளம்

SAAAAAA AAAASSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S AgAMMAMMAAA AAASA SSASAS SSAS SS S SSAS SSAS SSAS

மையை உடையவன். ஒருகாற் பெற்றவரே மீட்டும் வந்தா லும் அவரளவில் லோபி யாகாமல் மேலும் மேலும் ஈபவன். 14. தர-கொணர: அழைத்து வர வக்திசின் - வந்தேன். ஒள் வாள் - ஒள்ளிய வாளால் வெட்டப் பெற்ற,

15. உரவுக் களிறு - வலிமையையுடைய ஆண் யானை கள். களிறு என்றது இங்கே யானேயின் பினங்களே. களிற்றையுடைய பாசறை, புலாஅம் பாசறை என்று தனித் தனியே கூட்ட வேண்டும். புலாஅம் - புலால் காற்றம் வீசும். பாசறை - பாடி விரரெல்லாம் போர் செய்து புண்பட்ட மிகுதியாற் புலால் நாறுகின்ற பாசறை (பழைய உரை.) 16. வெள் வேல் பாடினி - வெள்ளிய வேலேப் பாடும் விறலி. 17. முழவின்-மிருதங்கத்தோடு அதன் தாளத்துக்கு இசைய. போக்கிய - வீசும். வெண்கை - வெறும் கையைப் பெற்ற, ஆடும் விறலி தன் கைகளால் முத்திரைகளைக் காட்டி ஆடாமல் வெறுமனே தாளம் போட அமைவதால் வெண் கை என்ருர். "வெண் கை என்றது பொருள்களே அவிநயிக்கும் தொழிற்கை யல்லாத, வெறுமனே தாளத் திற்கு இசைய விடும் எழிற் கையினே' (பழைய உரை.) 18. விழவின் அன்ன விழாவைப் போன்ற, கலிமகிழான் - ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் உடைய ஒலக்கத்தில்,

துறை - காட்சி வாழ்த்து. வண்ணம் - ஒழுகு வண்ணம். தாக்கு - செந்துக்கு. பெயர் - புலாஅம் பாசறை,

கண்ட காட்சியை வருணித்தலின் காட்சி வாழ்த் தாயிற்று. புலால் நாற்றம் வீசும் பாசறையை வருணித்து அங்கே ஒலக்கம் நிகழ்வதாகக் கூறின. மையின் புலாஅம் பாசறை என்ற பெயர் இப் பாடலுக்கு அமைந்தது. பதிற்றுப்பத்தில் இது 61-ஆவது பாட்டு.