பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புது வெள்ளம்

களாக எழுகின்றன. கடலிலே நீர் குறைவதுண்டா? அது நிரம்பி நிறைந்த சூலையுடையது போல இருக் கிறது. கடலின் பரப்புக்கு அளவேது? அது செறிந்த நீர்ப் பரப்பை உடைய பெரிய கடல்.

எங்கும் பரந்து ஒரே நீர் மயமாகக் கிடக்கும் கடலிலே வளி பாய்ந்து அடுவதஞலே மலையைப் போன்ற அலைகள் எழுந்து கரையிலே மோதித் துய நீர்த்திவலைகளாக உடைகின்றன; திவலைகள் கூட அல்ல; பிசிர் பிசிராகப் பணித் துrவலைப் போலச் சிதறு கின்றன.

அந்தக் கடலுக்குள்ளே சூரனுடைய உயிர் நிப்ே யாகிய மாமரம் தலை கீழாக நின்றது. சூரணே அதற்குள் புகுந்து கொண்டிருந்தான். எல்லோருக்கும் வருத்தத்தைத் தரும் அசுரர்கள் தவம் செய்தார்கள். சூரனும் தவம் இயற்றினன். அதன் பயனுக அவர் களுக்கு ஒரு மாமரம் கிடைத்தது. அவுனர் குலத் தலைவனுக்குப் பாதுகாப்பாக அந்த மாமரம் நின்றது. அது கடலுக்குள்ளே இருந்ததால் கண்ணுக்குத் தெரியாது என்று அவுணர் நினைத்தனர். முருகனு டைய வேல் அந்தக் கடல் நீரையெல்லாம் சுவறச் செய்து மாவின் அடி மரத்தைப் பிளந்துவிட்டது.

அமரர்களுக்கெல்லாம் சூரன் மிக்க துன்பத்தை உண்டாக்கினன். அவனை அடக்க வழி தெரியாமல் அவர்கள் திண்டாடினர்கள். முருகனிடம் முறை யிட்டார்கள். வளி அலைகளை அடுவதனுல் பிசிராக உடையும் நளியிரும் பரப்பையுடைய மாக்கடலில் சூரனுக்குரிய மாவின் அடியை அப்பெருமான் தடிந்து