பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம் ! 15

செயலைப்பற்றிச் சொல்வதைப் புலவர் கேட்டிருக்கிருர். இமயக் காட்சியை அவர்கள் விரித்துக்கூறக் கேட்டவர் கண்ணனர். அச் செய்திகள் இப்போது நினைவுக்கு வருகின்றன.

இமயத்தின் புகழ் மிகப் பெரிது. உலகத்தில் உள்ள மலைகளிலெல்லாம் பெரியது அது; சிவபெருமா னுக்குரிய கைலாயத்தைத் தன்பாலுடையது. அதன் பெருமையைப் பல நாட்டுப் புலவர்களும் பல மொழிப் புலவர்களும் பாடியிருக்கிறர்கள். அதன் இசை மிகப் பெரிது; பேரிசை இமயம் அது.

அங்கே உள்ள மரம், விலங்கு, மக்கள் இவர்களைப் பற்றி அந்த வீரர்கள் சொன்னவை நினைவுக்கு வருகின்றன.

மலைச் சாரல்களில் முள்ளு முருங்கை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. அவற்றினிடையே கவரிமான் கள் உறங்குகின்றன. அந்த உறக்கத்தில் அவை கனவு காண்கின்றன. நல்ல புல்லை உண்டு, அருவி நீரை உண்பதில் அவற்றிற்கு விருப்பம் அதிகம். விருப்பமான பொருள்களைக் கனவிலே காண்பது இயற்கை. ஆகையால் கவரி மான்கள் பரந்து விளங் கும் அருவியையும் நரந்தப் புல் படர்ந்த வெளியையும் கனவிலே காண்கின்றன.

முனிவர்கள் இமயமலைப் பகுதியிலே வாழ்கிருர் கள். கவரிமான் அவர்களின் அன்பினுலே வளர்பவை.

இமயத்தை வடக்கு எல்லையாகக் கொண்டு, தெற்கே உள்ள கன்னியாகுமரியைத் தெற்கெல்லையாக