பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிமேல் வெற்றி 85

மும் ஈகையும் நல்லியல்புகளும் பெரியோர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தன. அவர்கள் அவனை நீடு வாழவேண்டுமென்று வாழ்த்தினர்கள். அவன் செல்வம் வளர வேண்டுமென்று வாழ்த்தினர்கள். அவர்களே வாழ்த்தும்போது புலவர்கள் வாழ்த்து வதற்குக் கேட்கவேண்டுமா?

நின் செல்வம் வாழ்க! நின் வாழ்வு வாழ்க!” என்று புலவர்களும் வாழ்த்தினர்கள். காப்பியாற்றுக் காப்பியனரும், 'வாழ்க நின் வளனே! வாழ்க நின் வாழ்க்கை!" என்று வாழ்த்தினர். --

அவன் வாழ்வது அவனுக்காக மட்டும் அன்று. அவன் வாழ்ந்தால் உலகம் வாழும். உயர்ந்தோர் வாழ்வார்கள். நல்லிசைச் சான்றேர் வாழ்வார்கள். பாணரும் பொருநரும் கூத்தரும் விறலியரும் வாழ் வார்கள். அவ்வளவு பேரையும் தனித்தனியே வாழ்க என்று வாழ்த்துவதைவிடச் சேரன் வாழ்க என்று வாழ்த்தினல் போதும். அவன் எல்லோருக்கும் இன்ப வாழ்வை அளிப்பான்.

அவன் புகழை ஏத்தும் பெரியோர்கள், அவனு டைய உள்ளம் குளிரவேண்டு மென்ற எண்ணத்தால் வாழ்த்தவில்லை. அவர்கள் உண்மையையே சொல்ப வர்கள். ஒரு பயன் கருதி ஒன்றைப் பலவாக்கிப் புனைந்து கூறுகிறவர்களும் அல்ல. எப்போதும் வாய்மையையே மொழியும் வாயை உடையவர்கள். வாய் (வாய்மை) மொழி வயர் சேரன் புகழைச் சொல்லி ஏத்துவதைப் புலவர் காப்பியனர் கேட்டிருக்கிருர்.