பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துறைப் பரதவன் 45

ஏறிச் செல்வதற்குரிய கப்பல்களைக் கட்டின்ை. கடல் எவ்வளவு கொந்தளித்தாலும் கலங்காமற் செல்லும் உறுதியான மரக்கலங்களை இயற்றச் செய்தான். எல்லாவற்றையும் ஆயத்தம் செய்து கொண்டு கடலின் மேற் சென்ருன். -

கடலிடையே வாழ்ந்த பகை மன்னர்களுக்கு வேறு சிறப்பான பலம் இல்லை. கடலே பெரிய பலமாக உதவியது. கடலின் அலைகளையும் ஆழத்தையும் வெல்லும் கடற்படை உடையவர் அவர்களை எளிதில் வென்றுவிடலாம். உண்மையில் அந்த வெற்றி அவர் களை வென்ற வெற்றி ஆகாது; கடலையே வென்ற வெற்றியாக முடியும். கடல்தானே கடப்பதற்கு அரிய தாய் அந்தப் பகைவர்களுக்கு அரணுய் இருந்தது?

செங்குட்டுவன் படையுடனும் படைக் கலங் களுடனும் மரக்கலங்களுடனும் சென்று கடலிடையே வாழும் பகைவரொடு பொருதான்; பொருது வென் ருன். அங்கிருந்த சிறு மன்னர்களை அழித்தான். அந்த மன்னர்களை அவன் அழித்தது பெருவிறலாகாது. அவர்கள் நிலப் பகுதியில் வாழ்ந்திருந்தால் கண நேரம் அவர்கள் நின்றிருக்கமாட்டார்கள். ஆகவே, அவர்களை வென்ற வெற்றி இது என்று சொல்வது செங்குட்டுவனது போர்த்திறலுக்கு ஏற்புடையது அன்று. ஆணுலும் பல காலமாக மக்களுக்குத் தீங்கு விளைவித்து வந்த பகைவர் கூட்டத்தை மிக்க முயற்சியை மேற்கொண்டு அழிக்கவேண்டி யிருந்தது. உண்மைதானே? கடலை வெல்ல வேண்டி யிருந்தது தான் அதற்குக் காரணம். செங்குட்டுவன் கடலை