பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துறைப் பரதவன் 55

பகைவர்களுடைய நாட்டின்மேல் சேரமான் படை யெடுத்தான். பகைவர்களைக் கொன்ருன். அவர்களு டைய நாட்டில் எரிமூட்டினன். அதனுல் நாற்றிசையும் உள்ள ஊர்கள் எரிந்தன. எங்கே பார்த்தாலும் புகை மண்டியது. அந்தப் புகையைக் கண்ட சேரன் படை வீரருடைய உள்ளங்களில் உவகை மண்டியது. பகை வர்களுடைய முனைகளைச் சுட்ட நெருப்பு மேலும் மேலும் பரந்து எரிந்ததனுல் புகை பரந்தது. அந்தப் புகை பட்டுச் சேரமானுடைய மாலையில் உள்ள இதழின் கவின் அழிந்தது. இவ்வாறு சேரனுடைய மாலை மங்கினுலும் அது அவனது விறல் விளங் கியதைக் காட்டியது. அப்போதுதான் சேரமானுடைய மார்பிலே பூசிய சந்தனம் புலர்ந்தது. வாடிய மாலையும் புலர்ந்த சாந்துமாக அவன் நின்ருலும் வெற்றித் திருவோடு நின்ருன். மார்பிலே புதிதாக அணிந்த மாலையும் பூசிய சந்தனமும் வேறு பட்டாலும் அவனு டைய மார்பின் இயற்கை யெழில் வேறுபடவில்லை. அங்கே சாமுத்திரிகா லட்சணத்தின்படி மூன்று இரேகைகள் இருந்தன. அவை விளக்கமாகவே இருந் தன. கவினழிந்த மாலையும் புலர்ந்த சாந்தும் கொண் டிருந்தாலும் அவன் மார்பில் என்றும் பொலிவோடு கவினழியாமல் பல்பொறிகள் இருந்தன.

பேரெழில் வாழ்க்கை - சேரநாட்டு வளப்பத்தையும் மக்களுடைய இன்ப வாழ்க்கையையும் கண்டு களிக்கும் வாய்ப்பும் பரண

ருக்குக் கிடைத்தது. அந்த நாட்டின் ஆறுகளையும் மலைகளையும் பொழில்களையும் பார்த்து இன்புற்ருர்,