பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை vii

தம் வீரத்தைக் காட்டுதலும், அவ்வாறு எறியப் பெற்ற யானைகளின் உடல்களால் போர்க்களத்தில் காற்றம் உண் டாதலும், வீரர்களைப் புறங்காட்டி ஒடச் செய்து அரசர்களே வீழ்ச் செய்தலும், பகைவர்களேக் கொல்வதனால் களத்தில் இரத்தம் பாய்ந்து அருகில் உள்ள கழியிலே கலந்து அதன் நிறத்தை மாற்றிச் சிவப்பாக்குதலும், அரசருடைய பனே மாலேயிலும் கழலிலும் படும்படி அவ்விரத்தம் சிதறுதலும், பகைவர் மிக்கதுன்பத்தை அடைதலும், சேரர் வெற்றி பெற்று அதனுல் வீரர்களுடன் துணங்கைக் கூத்தாடலும், வெற்றி பெற்றபிறகு பாசறையில் அதனேக் கொண்டாடுதலும், புறங் காட்டி ஒடுபவர்களேக் கொல்லாது விடுதலும் ஆகிய செய்தி களே இதில் உள்ள பாடல்கள் தெரிவிக்கின்றன. கடலுக் குள் சென்று செய்யும் கடற்போரைப் பற்றிய செய்தியும் இரண்டு பாடல்களில் வருகின்றன.

சேரர்களின் வெற்றிக்குக் காரணமாக இருப்பது அவ ருடைய படையின் திறல். நால்வகைப் படைகளேயும் பற்றிய செய்திகளே இந்தப் பாடல்களில் காணலாம். பண் அமைந்த தேர்களே ஒரு புலவர் காட்டுகிருர். போர்க் களத் தில் பட்ட வீரர்களின் பிணங்களின்மேலும் யானே குதிரை ஆகியவற்றின் உடலங்களின்மீதும் அவை உருள்கின்றன. அப்படி உருண்டாலும் அவற்றின் சக்கரங்கள் தேய்வ தில்லே. "மீபிணத் துருண்ட தேயா ஆழி' என்று புலவர் சொல்கிருர்,

சேரன் படையிலுள்ள யானைகளே எண்ண முடியாது என்று ஒரு புலவர் சொல்கிருர். கொங்கு நாட்டில் உள்ள ஆநிரைகளேப் போல அவை கூட்டம் கூட்டமாக இருக்கின் றனவாம். அவை கட்டுத் தறிகளிலே கட்டினுல் அடங்குவ தில்லே. குத்துக் கோல்களே முறித்து விடுகின்றன. வானத் திலே பறக்கும் பருந்தின் கிழல் தரையின்மேல் தெரிந்தால் அந்த நிழலேச் சாடுகின்றன. சேரமானுடைய பட்டத்து யானேயை ஒரு பாட்டில் பார்க்கிருேம். சேரமான் அதன் மேல் ஏறி உலா வருவது, முருகக் கடவுள் தன்னுடைய பிணிமுகம் என்னும் யானேயின்மேல் வருவதுபோல இருக்கிறதாம். அந்த யானே குற்றம் சிறிதும் இல்லாமல் . எல்லா இலக்கணங்களும் அமைந்தது. கொம்பிலே வலிமை