பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் 71

"அப்படியானுல் அவன் இருக்கும் களத்துக்குச் செல்ல நல்ல வழி இருக்கிறதா?”

'மெத்தென்ற வழி உண்டு. அதில் நடந்து செல்லலாம். மெல்லிய வழியில் மெல்ல மெல்ல நடந்து செல்லலாம். குறுக அடி வைத்து நடந்து போகலாம்.' "போர் நடக்கும் இடத்தில் சென்ருல் தீங்கு ஒன்றும் இல்லையா?"

"போர் இப்போது நடக்கவில்லையே. போர் முடிவு பெற்றது. போரில் வெற்றி பெற்ற மிடுக்கோடு மன்னன் பாடி வீட்டில் வீற்றிருப்பான். அந்தக் கோலத்திலே அவனைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். போவோமா?"

'அங்கே போய் என்ன செய்வது?" "உனக்கு நான் இதைச் சொல்ல வேண்டுமா? நீ இன்னும் இளங்குழந்தையா? கை நிறைய வளையல் களை அணிந்துகொண்ட சிறு பெண்ணுக இருந்த நீ இப்போது சில வளைகளை மாத்திரம் புனைந்திருக் கிருயே; ஏன்?

'ஆ டு ம் போ து வளைகள் உடைந்துவிடும். ஆதலின் சில வளைகளை அணிந்திருக்கிறேன். அது பற்றி இப்போதென்ன கவலை?"

'சில வளைகளை அணிந்த விறலியாகிய உனக்கு, நீ எதற்காக அப்படி அணிந்தாய் என்று தெரியும் போது, துணங்கையாடிய வெற்றியையுடைய அரசன் முன்னே சென்ருல் இன்னது செய்யவேண்டுமென்று தெரியவில்லையா?"