பக்கம்:புதையலும் பேழையும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புதையலும்

தொடர்கள், காரணப் பெயர்கள்.

திருக்குறளில் வந்துள்ள இயற்பெயர் இந்திரன்’ என்னும் ஒன்றே. காரணப் பெயர்களாகப் பல, தனி மொழியாகவும் தொடர் மொழியாகவும் அமைந்துள்ளன. சிலவற்றைக் காண்போம் :

வகுத்தான்’ (குறள் : 377) -என்பது தனிமொழியாக அமைந்த காரணப் பெயர். *ஆதிபகவன்’ (1) . *வாலறிவன்’ (2) 'மலர்மிசை ஏகினான்" (3) பஐந்தவித்தான்’ (25) அடியளந்தான்” (610)

உலகியற்றியான்’ (1062) *தாமரைக் கண்ணான்’ (1103) -என்னும் இவையெல்லாம்

தொடர் மொழிகளாக அமைந்துள்ள காரணப் பெயர்கள்.

இவை போன்ற காரணப் பெயர்களை இடுகுறிப் பெயர் களாக முகவை மாவட்டத்திலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் இட்டு அழைப்பது இன்றும் வழக்காற்றில் உள்ளது.

- பிழை பொறுத்தான்,

ஊருடையான்,

நாடு காத்தான்.

நாடாண்டான்,

எப்போதும் வென்றான் -என்னும் பெயர்களும் . இவை போன்றனவும் மக்கட்குப் பெயர்களாக இடப்பட்டு அழைக்கப்

படுவதும் திருவள்ளுவர் வாழ்விடத்திற்கு அழைத்துச் செல் கின்றன.

தொழில் முறை.

ஒரு நாட்டில் பகுதிக்குப் பகுதி அந்நாட்டு மொழி, அடிப் படை பிறழாது வேறுபட்ட உருவத்தில் வழங்கப்படுதல் மரபு. அதுபோன்று, தொழிலைச் செய்யும் முறையும் அவ்வப்பகுதியின் இயற்கைக்கேற்ப வேறுபடும். தமிழகத்தின் அடிப்படைத் தொழில் உழவுத் தொழில். உலகமே சுழன்றும் ஏர்ப்பின்னது.