பக்கம்:புதையலும் பேழையும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றார் திருமூலர். அவனை உணர மட்டுமன்று: இந்தியத் துணைக்கண்டம் தன்னையும், தனது பாரம்பரியத்தையும் முழுமையாக உணரவும் அவை,

பயன்படும். - . . . .

புலவர் கோவை. இளஞ்சேரன் அவர்களின் கட்டுரைகளிற் காணும் சில முடிவுகள் மேலை நாட்டு மரபு வழி ஆராய்ச்சியாளர்கட்கு ஏற்க இயலாதன வாவும் இருக்கலாம். ஆய்வும், அதன்வழி காணும் முடிவுகளும், கூட்டல், பெருக்கல் வாய்பாடு போன்றனவல்ல. இங்கு முடிந்த முடிபுகள் என்று எவையும் இல்லை. கிடைக்கும் செய்திகள், தடயங் கள் ஆகியவற்றின் அடிப்படையில், சில வாதமுறை களை வைத்து அவரவர் தெளிவிற்கேற்ப எடுக்கும் முடிவுகளே ஆய்வின் கண்டுபிடிப்புகளாகும். செய்தி களும் தடயங்களும் விரிவுபடும் பொழுது முடிவுகள் மாறலாம். பயன்படுத்திய செய்திகள், தடயங்கள் ஆகியவற்றின் தரம்பற்றிய தெளிவுகள் மாறும் பொழுதும் முடிவுகள் மாறலாம். இலக்கியத்தின் துணை கொண்டு தமிழ்ச் சமுதாயம் பற்றிய சில உரிமைகளை அறியும் முயற்சிக்கு, புதையலும் பேழையும்', ஓர் எடுத்துக்காட்டு. முயற்சி பாராட்டத் தக்கது; போற்றத் தக்கது. தமிழகம் வரவேற்க வேண்டும். o

சென்னை

1989 வா. செ. குழந்தைசாமி