பக்கம்:புதையலும் பேழையும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 14?

காற்றுக்கு வழி வகுக்கப்பட்டது. மெல்லிய காற்றை வாங்கி நல்லோசையோடு தரும் சிறு சிறு புழைகள் (துளைகள்) அமைந் தன. இதனை மாங்குடி மருதனார், -

"வகைபெற எழுந்து வானம் மூழ்கிச் சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில்' - - -என மதுரைக் காஞ்சியில் (357, 358) விளக்கியுள்ளார். வானம் மூழ்கும்’ என்ப தற்கு ஏற்ப அவரே, - -

பருந்துகள் தங்கி மகிழும் பலவகைப்பட்ட மாட்சி - யுடைய நல்ல இல்லம்' -என்று விவரித்துள்ளார். இத்தகைய நல்லில் பலவகை மாட்சிகளும் பெறத் துவங்கியது.

இத்தகைய நல்லில்லும் மனைகளும் சுண்ணம் பூசப்பட்டும் வண்ணம் தீட்டப்பட்டும் காட்சிக்கு இனியவையாகச் சுற்றுச் சுவர் பெற்று வளமனை ஆயின; அகழியும் அரணும் பெற்று அரண் மனை ஆயின.

வெள்ளி போன்று விளங்கும் வெண்மையான சுண்ணாம்பு வாரிப் பூசப்பட்ட சுவர்கள் உருவாயின. நீலமணி போன்று திரண்ட உறுதியான தூண்கள் நிறுத்தப்பட்டன. செம்பாலே செய்யப்பட்டது போன்று நெடிய சுற்றுச் சுவர்கள் எழுந்தன. நல்ல அழகான பூங்கொடிகள் ஒவியமாகத் தீட்டப்பட்டன. மூல அறை யாகக் கருவரை (இதில் இல்லுறை தெய்வங்கள் இடம் பெறும் போலும்) ஒன்று அமைக்கப்பட்டது.” -இவ்வாறாக உருவான காட்சிக்கினிய நல்ல இல்லத்தை (காண்பின் நல்லில்) நக்கீரர் நெடுநல்வாடையில் விளக்கி

1 'குறும்பல் குழுவின் குன்றுகண் டன்ன

பருத்து இருந்து உகக்கும் பன்மான் நல்லில்"-மது. கா: 501, 502 2 .வெள்ளி யன்ன விளங்கும் சுதையுரீஇ

மணிகண் டன்ன மாத்திரள் திண் காழ்ச் செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ கருவொடு பெயரிய கிாண்பின் நல்லில்: * . . . . . - -நெடு. வா 110-114,