பக்கம்:புதையலும் பேழையும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புதையலும்

வள்ளலார் தாம் எழுப்பிய புதுமைக் திருக்கோவிலில் ஏழுவாயில் அமைத்து ஏழு திரையிட்டார். .

உரன்வலராம் சித்தர்களும் உடம்பினுள் ஒடும் உயிர் மூச்சின் ஒட்டம் ஏழு படிகளில் உயர்வதாகக் கண்டனர். அவ்' ஏழையும் வயிற்றுமூலம், நீரகம், கொப்பூழ், நெஞ்சீரல், தொண்டைக் குழி, சுழிமுனை, மண்டையுச்சி என அடிவயிற்றினின்று மேல் மேல் அடுக்காக வகுத்தனர். உயிர் மூச்சு இவ்வேழு அடுக்குகளிலும் ஏறி உயர்வதாகக் குறித்தனர். அதனையும் ஒரு கட்டட அமைப்பே போல் எழுநிலை அடுக்கு மாடமாக உருவகம் செய்தனர்.

உரன்வலர் உள்ளத்தில் எழுந்த இக்கருத்தும், வள்ளலார் வாய் மொழியும் நம் பழந்தமிழரது எழுநிலை மாடத்தின் நிழல் களே எனலாம்,

ஆறு பருவத்திற்கு ஆறு மாடி.

எழுநிலை மாடங்கள் இன்பமாகப் பொழுது போக்குவதற் காகவே கட்டப்பட்டவை. பருவ கால மாற்றங்களின் இடையூறு தோன்றாமல் செல்வச் செழிப்புள்ள கணவன் மனைவி கூடியிருந்து மகிழ்ந்து புணர்ச்சி இன்பத்தைத் துய்ப்பதற்காகவே அமைக்கப் பட்டன. இன்பத்தில் முடிசூடும் புணர்ச்சி, நிலா ஒளியில் நிகழ்வ தாக இருந்தது. இதற்கு வாய்ப்பாக எழுநிலை மாடங்களில் * நிலா முற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. . .

நிலா முற்றம் என்பது மேல் கூரை மூடப்படாத திறந்த மாடி இடம். நிலவின் ஒளியில் படிவதற்கும் இந்த முற்றம் பயன் படும். காதல் மேவியவர் நிலா ஒளியில் கட்டிலில் புணர்வர். ஆண், பெண் புணர்ச்சியை நாகரீகமாக நிலவுப்பயன்கொள்ளல், என்று குறித்தனர். இவ்வாறு நாகரீகமாகக் கூறுதலை இலக்கணம் 'இடக்கர் அடக்கல், என்று குறிக்கும்.

இந் நிலவுப்பயன் கொள்ளுதலை இலக்கியங்கள் ஒருங்கு நின்று பேசுகின்றன:

'நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து , - - -நெடு. வா.: 95 "வெண்ணிலவின் பயன் துய்த்தும்- பட். பாலை 114