பக்கம்:புதையலும் பேழையும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* rร t

பேழையும் * 139

அதோ, குழல் பொன்பூண் கட்டப்பட்டு உள்ளது. வங்கியம் இதோ தொங்குகின்றது. ஆவஞ்சி, குடுக்கை என்னும் தோற்கருவிகள் அதோ மாட்டப்பட்டுள்ளன.

'கம் மென்ற மணத்தோடு வெந்நீராடுதல் போன்ற உண்ர் வும் ஊறுகின்றதன்றோ? அவன் வருகின்ற தேர் ஒசை கேட் கின்றது. காத்துக் கிடக்கின்ற "அவள் அவனை இங்கேதான் வரவேற்பாள். அவனும் இங்கேதான் நேரே ஏறி வருவான். நாம் மேலே ஏறிவிடுவொம்.

மூன்றாவது நிலை மாடம்.

毯 移 * அடைமழை கொட்டுகின்றது. நம் தாடை கூதிர்ப்பருவப் கள் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொண்டு பள்ளியறை. தாளங் கொட்டுகின்றன அன்றோ? கூதிர்ப்

பருவம் அன்றோ? இந்தப் பருவத்தைக்

"குன்றையே குளிர வைக்கும் கூதிர்க்காலம்' என்பர். நம் உடம்பு உதறத் தொடங்கிவிட்டது. உள்ளே போனால் உதறல் போய் விடும். வாயில் மிகத் தாழ்வாக உள்ளது. பணிந்துதான் போக வேண்டும். குனிந்து புகுந்து வருக! இருளாக உள்ளது. நடுவே தொங்கும் இரும்பாலே செய்யப்பட்ட விளக்கில் எண்ணெய் ஈரத்திரி'2 ஒளிவிடத் தொடங்கிவிட்டது. கிழக்கிலும் மேற்கிலும் அமைந்த கூதிர்ப்பள்ளியின் குறுங்கண்' சாளரம் வெளியே சிறு துளையாகவும், உள்ளே விரிந்து வரும் வாயாகவும் அமைந்துள்ள அமைப்பு கூதிர்க் குளிருக்கு வாய்ப்பானது. இக்குறுங் கண்ணுக்கும் அடைப்பான்கள் உள்ளன.

கதவின் நிலைகள் மிகத் திண்ணியனவாய் உள்ளன. இரட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் தாமே மோதி மூடிப் பொருந்திக் கொண்டுள்ளன. மோதும் விரைவில் தாழ்கள் இறுகிக்கொண்டதைக் காண்க! இக்காலக் குளிர்பதன அறைக் கதவைப் போன்று உள்ளன. அன்றோ? திறக்கும் நேரத்தில் குளிர் புகுந்தால் என்ன ஆவது? இக் கதவைப் பார்த்துத் தான் நக்கீரர், -

'திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப" (நெடுநல்வாடை :62, 63) என்று பாடினார்.

! 'குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்' - நெடு. வா : 12. 2 இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொழீஇ' நெடு. வா. :42,