பக்கம்:புதையலும் பேழையும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 161

போக்கும், அந்நீரால் பல்வலி, வாய்ப்புண், நாப்புண் ஆகிய வற்றிற்குக் கொப்புளிக்கப் புண் ஆறும்.

இவ்வாறு, ஒதியம்பட்டைச் சாற்றின் விளைவு, வீக்கத்தைப் போக்கி, பெரும்பாட்டை நூக்கி, விந்தைத் தேக்கி, புரையோட்டத்தைத் தாக்கி, புண்களை நீக்குவது

போன்று,

மாறனது வடுக்களின் வீர விளைவும் விளைவால் நேர்ந்த செல்வமும் வறுமையாம் வீக்கத்தைப் போக்கி: பகைவரின் பெரும்படையை நூக்கி: வீரத்தைத் தேக்கி, துன்பமாம் ஊடுருவலைத் தாக்கி, மனப்புண்களை நீக்கியதாகக்

கொள்ளலாம்.

பூவரசு.

நூறாண்டு முற்றிய பூவரசினது பட்டை பெரும்பயன் நல்கும் மருந்து. இப்பட்டையின் சாற்றால் புழுத்த புண்ணைக் கழுவப் புண் ஆறும் காணாக் கடிநஞ்சுக்கு ஒருவாய் ஒருவாயாக மூன்றுவாய் சாறு கொடுக்க நஞ்சின் கொடுமை திரும். சோகை யால் வீங்கிய பெருவயிற்று வீக்கத்திற்குத் தொடர்ந்து ஒரு கிழமை (ஏழுநாள்) ஒவ்வொரு வாய் கொடுத்து வர நோய் நொடியும். இம்மரப்பட்டையின் குணம்பற்றி அகத்தியர் எழுதிய குணபாடம் என்னும் மருத்துவ நூல்,

'பூவரசம் பட்டை (காயும் பூவும்) தொழுநோயாம் குட்டப் புண்ணையும், சூலையாம் மிகுதியான வயிற்று நோவையும் கொல்லும். பொல்லாத மகோதரம் என்னும்

பே, 11