பக்கம்:புதையலும் பேழையும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 புதையலும்

பெருவயிறு, சோகைநோய், உடம்பைச் சேர்ந்து பரவும்

கரப்பான் என்னும் அரிப்பு நோய், கிரந்தி, குளிர் மேக

நோய் ஆகிய இவற்றையெல்லாம் போக்கும்' *

-என்று பேசுகின்றது.

இவ்வாறு,

பூவரசம்பட்டைச் சாறு,

புழுத்த புண்ணை ஆற்றி, காணாக் கடிநஞ்சை மாற்றி, பெருவயிற்றைத் தேற்றி, பெருநோய்களைத் துாற்றிப் பயன் நல்குவது

போன்று

மன்னனது வீரத்தினால்

விளைந்த செல்வமும் மன்னனது புழுத்த பழியை ஆற்றி உட்பகையை மாற்றி, மக்கள் அச்சத்தைத் தேற்றி, கோழைகளைத் துாற்றித் திகழ்ந்தது என்று உணர

முடிகின்றது.

நாவல்.

நாவல் பட்டையின் சாறு இரும்பைச் செந்தூரமாக்கும் வல்லமை கொண்டது. நாவல் கனியின் சாற்றில் பொன்னே உண்டாக்கப்படும். அப்பொன் சிறந்தது. நாவற்பொன் (சாம் பூநதம்) என்னும் பெயரால் அப்பொன் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றது. *

நீண்டநாள் இருமல், ஈளை இவற்றிற்கு நாவற்பட்டை யின் சாற்றைப் பாலுடன் கலந்து ஒரு மண்டிலம் (48 நாள்கள்)

1 'குட்டம் கடிதுலை கொல்லும்; விடபாசம்

துட்ட மகோதரஞ் சோகையொடு - கிட்டிமெயில் தாவுகரப் பான் கிரந்தி தண்மேகம் போக்கிவிடும் பூவரசங் காய்பட்டை பூ" -அகத்தியர் குண்பாடம் : 72 o