பக்கம்:புதையலும் பேழையும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 - புதையலும்

சாற்றைக் கலந்து இரண்டு திங்கள் அருந்திவர உடல் வலுப் பெறும். பட்டையை வேறு மருந்துப் பொருள்களுடன் கூட்டித் தைலமாக்கி நீரா க்கொள்ளலாம். வேரின் பட்டைச் சாற்றை வாந்திக்குக் கொடுக்க வாந்தி நிற்கும்; வயிற்றுக் கடுப்பும் போகும்.

இது போன்று,

மாறனது வீரம் -

நாட்டு மக்களுக்கு ஊட்டம் அளித்தது .

என்றும், பல வீரருடன் ஒத்துநின்றமையால் பெரும்படைக்கு வெற்றி விளைத்தது என்றும், அவனது தாள் ஊன்றிய முயற்சியால் வறிஞரது தளர்ச்சிகள் நீங்கின என்றும் காண முடிகின்றது.

வேம்பு.

வேப்பம்பட்டையின் சதைப்பகுதியில் 5 பலம் எடுத்து ஒரு படி நீர்விட்டு அரைப்படியாகச் சுண்டவைத்து வடிகட்டி இளஞ் சூட்டோடு மூன்று வாய் அளவு கொடுக்க, பரவும்வெப்பக்காய்ச்சல் வராது. அந்நோய் கண்டு நீங்கிய அயர்ச்சிக்கும் இவ்வாறு கொடுக்கலாம். 20 ஆண்டுகள் முதிர்ந்த மரத்தின் பட்டையைக் காயவைத்துப் பொடி செய்து 2 வராகன் எடை தேனில் குழைத்துக் கொடுக்கத் தொடர்ந்து இருந்துவரும் நீர் வேட்கை தணியும். நாச்சுவையின்மை போய்ச் சுவை ஊறும். மேலும் பயன்கள் f_6\}6).jssis] a * : :

வேப்பம் பட்டை போன்று

மாறனது வடுவால் வடிந்த யாக்கையைக் காணும் போதெல்லாம் ...' பொதுமக்களிடம் பரவியிருந்த பழைய அச்சம் பறந்தது; மீண்டு வரினும் அவனை நினைத்தாலே ஒடி ஒழிந்தது: * ...” “ , மக்களது சோர்வு எண்ணம் மாறி நாட்டுப்பற்று ஊறியது. - என்று கொள்ளலாம், -