பக்கம்:புதையலும் பேழையும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 181

கனக விசயர் தலையின் கல்லை ஏற்றினான் என்பது அவர் களைத் தூக்கச் செய்யவேண்டும் என்பதன் அறிகுறிச் செயலே யாகும். அன்றி, இமயத்தில் ஏற்றி வஞ்சியில் இறக்கினான் என்பது அன்று, ஆயிரம் கல் தொலைவு தூக்கிவரச் செய்தல் இயலாத ஒன்று. சிலப்பதிகாரப்படி நோக்கினாலும் கல்லை எடுத்த இடத்தி லிருந்து, நீராட்ட வேண்டிய கங்கைக் கரை வரைதான் கணக விசயர் தலையில் கல் கொணரப்பட்டது என்பதை உணரலாம். இவ்வாறு கங்கைக் கரை வரை வந்த கல் பின்னர் வஞ்சி மாநகர் வரையிலுமோ - கோட்டம் அமைத்த இடம் வரையிலுமோ கொண்டு வரப்பட்டிருக்கும். இவ்வாறு கொணரப்பட்ட போக்கு வரத்து வகையால் விழுந்தோ மோதியோ மூளியாக வழியுண்டு. இமயத்தினின்றும் மீண்டும் ஒரு கல்லைக் கொணர்தலில் உள்ள பெரும்பணியைக் கருதி இம்மூளி பெரிதாகக் கொள்ளப்படாமல் மூளியிடம் வேறு கல்லால் நிரப்பப்பட்டுப் பொருத்தப்பட்டுச் சிலை வடிக்கப்பட்டிருக்கலாம். இந்த மூளியும் ஒருவகைச்சான்றாகின்றது.

கல் சான்று ஐந்து.

மேலும்,

1. சுருளிமலையில் காணப்பட்டுள்ள கண்ணகி யாரது சிலைக்கல் 1800 ஆண்டுப் பழமையைக் காட்டும் தேய்மானத்துடன் உள்ளது.

2. அத் தேய்மானத்திலும்,

கைவினை முற்றிய தெய்வப் படிமத்து வித்தகர் இயற்றியவிளங்கியகோலத்து' -எனச் சிலப்பதிகாரம் குறிப்பதற்கு ஏற்பக்கலைத் திறம் விளங்குகின்றது. அதனில் மேலோட்ட வரிகளாக அணிகலன்களது அமைப்புகளும் தெரிகின்றன.

3. சிலையில் இடது பக்க மார்பின் காம்புப் பகுதி

சிதைந்து தோற்றமளிக்கின்றது. கண்ணகியார் மதுரையைத் தீக்கிரையாக்கியபோது திருகி எறிந்

1. சிலம்பு நடுகல்: 227, 228,