பக்கம்:புதையலும் பேழையும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 187.

இவ்வாறு ‘மணி என்னுஞ் சொல் பத்து பொருள்களைக் கொண்டது.

இந்த மணியான சொல் சிலப்பதிகாரத்தில் ஒரு முடிச் சவிழ்க்கும் சொல்லாகின்றது.

கண்ணகியார் முதன்மை உறுப்பினர்

சிலப்பதிகாரம் என்றவுடன் நமது நினைவின் முனையில் வருபவர் கண்ணகியார். கண்ணகியார் சிலம்பில் தலையாயவர்; சிலப்பதிகார முதன்மை உறுப்பினர் என்பதை இளங்கோவடி களார் தமது நூலில் எங்கணும் பரவலாகக் காட்டியுள்ளார். அம் முதன்மையைச் சிலம்பின் தொடக்கமாகிய மங்கலவாழ்த்துப் பாடலிலேயே அமைத்துள்ளார். அவர் முதலில் அறிமுகப்படுத் தும் காப்பிய உறுப்பினர் கண்ணகியாரே.

கண்ணகிக்கு ஆர் விகுதி கொடுத்துச் சிறப்பித்துக் கண் ண கியார்’ என்றவர் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் ஆவார்.

"கண்ணகியார் மதுரை மூதூர் யாதென வினாவின திறத்தையுடைய” என்பது அவரது வாய்மொழி. பின்னும் ஒர் இடத்தில் "இக்கருத்தானன்றே கொலைக்களக் காதையிற் கண்ணகியார் ....................... என்றது. மென்க'? என்று

சிறப்பித்தார்.

மணிக் கண்ணகியார்

மணி என்னும் சொல்லுக்கமைந்த பத்து பொருளிலும் கண்ணகியார் பின்வருமாறு சிலம்பில் ஒளிவிடுகின்றார். அதனை முன்னே கண்ட வரிசைப்படியே காண்போம்:

அழகு மணி : 'போதிலார் திருவினாள் புகழுடை வடி'3 வால் அழகு மணியாய்த் திகழ்கின்றார்.

1. சிலம்பு பதிகம் : 17 உரை 2 சிலம்பு : மனையறம்படுத்தகாதை 89 உரை 3 சிலம்பு : மங்கலவாழ்த்து : 26.