பக்கம்:புதையலும் பேழையும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 புதையலும்

(எழுந்து வீழ் சில்லை') வீழ்ந்து எழுந்தது. கிளி போன்று சிறகை ஒடுக்கிப் பாய்ந்து பறக்கும் ஒருவகைப் பறவை ("ஒடுங்கு சிறை முழுவல்) கள் பாய்ந்துகொண்டிருந்தன. இவை யாவும் அண்மையில் நிலப்பகுதி உள்ளது என்பதை அறிவித்தன.

மணிமேகலை குறிக்கும் நாகர் தீவு -மாநக்கவாரம் -நிக் கோபார் தீவுகளின் மலைகள் காட்சியளித்தன. அத்தீவுகள் இந்திய அரசுக்கு உரிமையானவை. அந்நோக்கில் கப்பல் அரை மணி தேரம் அங்கு நின்று புறப்படுதல் கப்பல் துறை மரபு. அவ்வாறே நின்று புறப்பட்டது.

நீர் குடித்த காட்சி.

மறுநாள், என் உள்ளத்தில் ஊன்றி நிற்கும் நிகழ்ச்சி நேர்ந்த நாள் தாழ்வாரத்துச் சாய்காலியில் அமர்ந்து கடற்காற்றையும் காட்சி

யையும் சுவைத்துக்கொண்டிருந்தோம். அவ்வழியே நடந்த ஒரு பெரியவர்,

'காரானை தண்ணி குடிக்குது, பாருங்க . .

தண்ணி குடுக்குது பாருங்க -என்று கடற்குள் கையை நீட்டிக் காட்டிக் கூறியவாறே நடந்தார். எல்லாரும் அப்பக்கம் பார்வையைப் பாய்ச்சினோம். புதுமைக் காட்சி. ஆம் ; கடல் நடுவில் ஒரு யானை தன் தும்பிக்கையை நீரில் நீட்டிக்கொண் டிருந்தது. ஏறத்தாழ மூன்று நான்கு கல் தொலைவில் அக்காட்சி தென்பட்டது. அவ்வருங்காட்சி என்னைப் போன்ற புதுப் பயணிகளது முகத்தில் ஆர்வத்தை எழுதிவிட்டது. அடிக்கடி பயணம் செய்வோர் நடந்துகொண்டே பார்த்துச் சென்றனர். இலக்கிய நினைவில் நின்ற எனக்கு அக்காட்சி பெருவியப்பை எழுப்பி, அகல விழித்து நோக்கவைத்தது.

காட்சியில் எனது புறக்கண்கள் தோய்ந்து நின்றன. அகக் கண்ணோ அக்காட்சியைக் சூழ்ந்து சங்ககாலப் புலவர்

1 திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்

எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்' - - - - -மணி : 8 : 28, 29.