பக்கம்:புதையலும் பேழையும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 - புதையலும்

இதுகொண்டு முகில் யாவும் கடலில் நீர் பருகியே காரா கின்றன என்று கொள்ளக் கூடாது. இஃது ஒருவகை அருகிய நிகழ்ச்சியேயாகும். அறிவியல் தொடர்பிலும் இந்நிகழ்ச்சி மின் பிழிவாலும், மின் கவர்ச்சியாலும் நிகழக்கூடியதாகவே கருதப் படுகின்றது. -

"மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை

பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ -என நற்றினை (99) பாடுகின்றது. இதனைப் பாடியவர் கடல் அலையைத் தனது பெயரில் கொண்ட இளந்திரையன் என்பதும் ஒரு சுவையைத் தருகின்றது. - -

கடல் நீரை முகக்கும் காரானைக் கருத்து தமிழ் இலக்கியங் களில் பரவலாகப் பேசப்படினும் அப்பேச்சு ஒரு தனிப்பெருமைக் குரியது என்பது மற்றொரு கோணத்தில் நோக்கும் போது வெளிப்படுகின்றது. -

உலக இயற்கையின் வியப்புகள்" (Wonders of the Universe) என்றொரு படத்தொகுப்பு ஏறத்தாழ ஐம்பது ஆண்டு களுக்கு முன்னர் பதிப்பாகி வெளிவந்துள்ளது. அது மேலை நாட்டு வெளியீடு. உலகில் வியக்கத்தக்க காட்சிப்பொருள்கள், நிகழ்ச்சிகள் புகைப்படம் எடுக்கப்பட்டு அச்சேற்றப்பட்டுள்ள தொகுப்பு அது. அதனில் ஒரு படம் இக் காரானைப் படம். கடலில் இக்காட்சி அப்படியே புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படம் முன்னர் விவரித்த பாங்கிலே அமைந்துள்ளமை குறிக்கத் தக்கது.

உலக வியப்புகளில் ஒன்றாக இக் காரானை சேர்க்கப் பட்டிருப்பதை நோக்குங்கால் தமிழ் இலக்கியங்களில் உள்ள இவ்வமைப்பு தனிப்பெருமைக்கு உரியதே.