பக்கம்:புதையலும் பேழையும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 289

-என்று பாடிப் பூரித்துள்ளார். அங்கு நன்றாகப் படைத்தான். இங்குத் தானே அடியவராகி நாளுக்குநாள் -அன்றைக்கு அன்று -ஆக்கிக்கொண்டான். தன் புகழைத் தானே புதிது புதிதாகத் தமிழில் சுவைத்துள்ளான் இறைவன்.

இதுவரை கண்ட சான்றுகளால் தமிழினது தனித் தகுதிப் பாடு பலமுனைகளில் மிளிர்வதைக் காணலாம். தமிழ் தெய்வ மொழித் தகுதி உடையது. அருள் மொழியாம் தகுதி கொண்டது. இறைவற்கு உணவாகும் தகுதி கொண்டது. இறைவற்கு மிக உவப்பாகும் தகுதி கொண்டது. இறைமைக்குரிய இத்துணைத் தகுதிப்பாடுகள் இருந்தும் தமிழ் எவ்வாறு கோவிலில் கருவறைக்கு வெளியே நிறுத்தப்பட்டது? வழிபாட்டு - அருச்சனை - போற்றி மொழியாக வடமொழி எவ்வாறு முடிசூடிக்கொண்டது? எவ்வாறு கருவறைக்குள் தனியாட்சி செலுத்தி வருகின்றது? இந்த நிலை தமிழருக்கு ஒரு மானக்கேடான நிலையே. இந்த அளவுக்குத் தமிழரின் சூழல் நெடுங்காலத்திற்கு முன்னரே கெட்த் துவங்கி விட்டது. இக்கேட்டின் துவக்கத்திற்குத் தமிழ்ச் சமயச் சான்றோரும் அறிந்தோ அறியாமலோ ஒரளவில் துணை போயினர் எனலாம். -

வடமொழிக்கும் இடம்.

தேவார மூவர் காலத்தில் தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களாகவே இருந்தன. அவர்களது பாடல் களில் இதனைத் தெள்ளத் தெளிவாகக் காண்கின்றோம். ஆனால், பிற்காலச் சமயத்துறையினர், தேவார மூவர்க்கு வேறு பட்டு வடமொழியில் பெயர்களை மாற்றி வழங்க இடந்தந்தனர்; தாமும் வழங்கினர். இடைக்காலத்தில் சிறுகச் சிறுக வடமொழிப் பெயர்கள் செருகப்பட்டன. இதுபோன்றே, சிறுகச் சிறுக வட மொழி மந்திரங்கள் தமிழோடு இடம்பெற்று ஒண்டவந்த பிடாரி ஊர்க் கடாரியை விரட்டிய'தாய், இடத்தைக் கொடுத்தால் மடத்தையே பிடுங்கிய துறவிக் கதையாய் ஆகிவிட்டது.

. இந்நிலைக்கு முற்காலச் சமயச் சான்றோரின் பெருந் தன்மையே காரணமாயிற்று. நந்தம் செந்தமிழோடு வடமொழி யும் இறைவனின் அணுக்க மொழியாய் இடம் பெற்றது. இவ்வாறு இடம் பெறச் சான்றோர் தம் பெருந்தன்மையாலும், பரந்த உளப்பாங்காலும் இசைந்தனர்; ஏற்றனர்; போற்றினர்.