பக்கம்:புதையலும் பேழையும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24() புதையலும்

ஞானசம்பந்தராம் ஆளுடைய பிள்ளை,

'தம் மலரடியொன்று அடியவர் பரவத்

தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழல் சேர'

-என்று பாடினார். இவ்விரண்டு அடிகளும்; கூர்ந்து நோக்கத் தக்கன. முன் அடி, அடியவர்கள் பாடலாலும் தொழுகையாலும் பரவியதைக் குறிப்பது.* பின் அடி, இறைவனது நிறைகுணப் புகழைப் போற்றியாகச் சொல்லி, அப்போற்றியை இறைவன் தாளில் படைக்கும் அறிகுறியாய்; மலரைத்துோவி வழிபாடு இயற் றும் -"அருச்சனையைக் குறிப்பது. அப்புகழ்மொழி தமிழ்ச்சொற் போற்றியாகவும், வடசொற் போற்றியாகவும் தனித்தனியே அமைவதைக் குறிப்பது. வழிபாட்டில் தமிழ் வழக்கோடு வட மொழியும் இடம்பெற்றுப் புகுந்துள்ளதை உணரலாம்.

'முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்”

-என்று பாடிய திருநாவுக்கரையர் அவ்விரு மொழிநிலைக்கும் ஏற்ப இறைவனையும் இரு நிலையில் கண்டவராய்,

"ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’’’ -என்று பாடினார். இறைவனை ஆரியனாகக் காணும்போது செந்தமிழோடு, ஒட்டிய-ஆரியனாகக்கொண்டு,

'செந்தமிழோடு ஆரியனைச் சீரியனை' -என்று பாடினார். செந்தமிழ் ஆரியனை' என்று குறிக்காமல் "ஒடு" சேர்த்துச் 'செந்தமிழோடு' என்று குறித்ததில் ஒரு தனிக்கருத்து உண்டு.

"ஒடு", என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு, உயர்ந்த பொருளையே சாரும். 'ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே' என்றார் தொல் காப்பியர். ஆசிரியனோடு மாணாக்கன் வந்தான்' என 'ஒடு' வை உயர்ந்த ஆசிரிய

அப் தே திருமறை : 9 : 1. அப் தே : திருமறை : 5 : 3 அப் தே திருமறை : 5 : 8 தொல் :சொல் ; 87