பக்கம்:புதையலும் பேழையும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 புதையலும்

வடமொழிதான், அதுதான் இறைவனை உணர்த்தும்' என்று கூறும் இக்காலத்துப் பெருமக்களுக்கு இவ்வடிகள் தக்க குறிப்பைத் தருவன. தமிழ்ச் சொல்லோடு வடமொழிக்குத் தமிழரால் பெருந் தன்மையோடு கூடிய பரந்த மனப்பாங்கோடு இடமளிக்கப்பட்டது என்பதை "தமிழ்ச் சொல்" முன்னே அமைந்து அறிவிக் கின்றது. -

திருமூலர் காலத்தில் போற்றிக்கு இருமொழிகளையும் காட்ட வேண்டிய சூழல் இருந்தது. ஆயினும், அப்பர், 'செந்தமிழோடு ஆரியனை' என்றது போன்று திருமூலரும் மற்றோரிடத்தில் செந்தமிழ் வளத்தை வலியுறுத்தியுள்ளார்.

"செந்தமிழ் ஆதி தெரிந்து வழிபடு

நந்தி இதனை நவம்உரைத் தானே' இது வயிரவி மந்திரம்’ என்னும் பகுதியில் வருவது. இதில் நந்தியாம் தலைவனே உரைத்ததாகக் கூறினார். செந்தமிழ் முதலியவற்றால் இறைவியின் நிலையைத் தெளியலாம். அவ்வாறு தெளிந்து வழிபடு’ என்று ஆணையிடுகின்றது இந்த அடி. இங்கேயுள்ள "வழிபடு" என்னும் சொல்லை நினைக்கவேண்டும். இப்பாடல் அமைந்த பகுதி மந்திரம் (வயிரவி மந்திரம்) என்ற சொல் இணைந்து நிற்பதையும் நினைக்க வேண்டும். இந்த நினைப்பாலும் இணைப்பாலும் வழிபாட்டுக் கருத்து அறிவிக்கப் பட்டுள்ளதை உணரலாம். வடமொழி, "ஆதி" (முதலிய) பட்டிலில் அடக்கப்பட்டதும் ஒரு குறிப்பே.

சமயச் சான்றோர் ஆங்காங்கு குறித்துள்ள கருத்து களைக் கொண்டு,

மக்கள் தாமே (குருக்கள் இன்றி) வழிபட்டனர்; அருச்சனை செய்யும் வழிபாட்டு முறை புகுத்தப்பட்டது: அஃதும் தமிழ்ச்சொல் போற்றியாகவே நிகழ்ந்தது: காலப்போக்கில் வடசொற் போற்றியும் ஒட்டிஇடம்பெற்றது; காலப்போக்கில் வழிபாடு இயற்றி வைக்கக் குருக்கள்

பூசாரிகள் அமைந்தனர்;

SAASAASAASAASAASAASAAAS

1 திருமத் : 1.089