பக்கம்:புதையலும் பேழையும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 புதையலும்

முடிகின்றது. தமிழில் பாடுவதுதான் தமிழர்க்குத் தலைமை; தமிழர்க்குப் பெருமை; தமிழர்க்குப் புகழ்' என்றார்.

ஆனால், முருகன் அடியார் ஒருவர் இவ் ஐயம் இன்றி உறுதியான குரல் கொடுத்தார்:

"மொய்தார்குழல் வள்ளியை வேட்டவன்

முத்தமிழால் வைதாரையும் இங்கு வாழ வைப்பான்”

- -என்று பாடினார், தமிழில் புகழ்ந்து பாடும் வாழ்த்துக்கும் அருள்செய் வான்; வசைக்கும் அருள்செய்வான். இயற்றமிழால் ஒர் ஏச்சு: இசைத்தமிழால் ஒரு வசை, நாடகத் தமிழால் ஒரு திட்டு. முத் தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகன்' என்றன்றோ இப்பாடல் பேசுகின்றது. முருகன். புகழைத் திருப்புகழாகப் பாடிய அருணகிரியாரது கருத்து இது. இது நயந்தோய்ந்த கருத்தாயினும், இதில் முருகன் தமிழைக் கேட்டால் உள்ளம் குளிர்பவன் என்ற கருத்து திறைவாக விளங்குகின்றது. முருகன் தமிழ்க் கடவுள் அன்றோ? அதனால்தான் தமிழால் வைதாலும் வாழவைப்பவனானான்.

முற்காலத் தமிழர் உணர்வு. இவ்வாறு தமிழருமையை உண்மையாக அறியாதவர்கள் எக்காலத்திலும் இத்தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களை எண்ணி ஒரு புலவர் (யாரென்று அறிதற்கில்லை) சினங்கொண்டார். சிறிது வன்மையாகவே சாடிப் பாடினார்:

பேயறிவார் முழுமூடர் தமிழருமை அறிவாரோ

- பேசுவாரோ? நாயறியா தொருசந்திச் சட்டியா னையுமிந்த

- ஞாயந் தானே." -என்பது அப்பாட்டு. இது தண்டலையார் சதகம் என்னும் நூலில் உள்ளது. மூடர், பேய் அறிவார்; நாய் போன்றவர்'


مم------------------ متصہمہمات -------------ایس-او----

1 தண். ச : 23 : 3, 4,