பக்கம்:புதையலும் பேழையும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 11

எனவே, அம்ம’ கேட்கவைக்கும் குறிப்புடைய சொல். இச் சொல்லுக்கு இது பொருள் என்பதை,

"அம்ம கேட்பிக்கும்' " -எனத் தொல்காப்பியம் குறிக்கிறது. இலக்கியங்களில் இச்சொல் இப்பொருளில் பயின்று வரும். 'அம்ம வாழி, தோழி" என்பது நற்றிணைத் தொடர். இதற்குத் தோழி வாழ்க, இதனைக் கேள்' என்பது பொருள். இது போன்று,

'அம்ம வாழி கொண்க” (ஐங்குறு : 189) அைம்ம வாழி பான’’ (ஐங்குறு 132) 'அம்ம வாழி தும்பி’ (குறு : 392) "இன்னாது அம்ம தோன்றல்” (புறம் : 4)

- என ‘அம்ம’ இப்பொருளில் வருகின்றது. இவைகொண்டு அம்ம’ இலக்கியங் களிலும் இடம் பெற்றது. தோழி, தலைவன், பாணன், அரசன், தும்பி, அன்னை முதலிய பலரோடும் உரையாடுங்கால் அமைவது. இஃது இச் சொல்லுக்குக் குறிப்பிடத்தக்க சிறப்பு ஒன்று, இச் சிறப்பை இங்கே குறிக்க வேண்டியதாகின்றது.

இவ்வாறு உரையாடுங்கால் - உரைப்பதற்கு முன், குறிப்பில் பொருள் தரும் சொல்லாக அமைதலின் இஃது உரையாடலை எழுப்பும் - கேட்கவைக்கும் பொருளுக்குரிய சொல்லாய் "உரைப் பொருட் கிளவி (கிளவி = சொல்) எனப்படும். இதனை,

"அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்" -எனத் தொல்காப்பியம் குறிக்கின்றது. இச்சொல் பொருளின்றி அசைச்சொல்லாகவும் வரும். இதனை, r y -o

"அம்ம என்னும் அசைச்சொல்” . . -எனத் தொல்காப்பியமும்,

"அம்ம உரையசை கேண்மினென் ருகும்"

. . . . . " -என நன்னூலும் குறிக்கின்றன.

1 தொல் சொல் : 278 8 தொல் : சொல் : 180. 2 தொல் : சொல் : 211 4. தன் : நூற்பா : 488