பக்கம்:புதையலும் பேழையும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - - புதையலும்

'அகரமது ஆதியான

எழுத்தெலா மாகிப் பின்னர் மகரமும் ஆன மேலோன்'

-என்று விளக்கினார். இதன் கண் அகரத்தைப் போன்றே மகரம் தனிச்சிறப்புடையது என்ப தையும், இவ்விரண்டு எழுத்துகளின் தொடர் தொகுப்பில் இறையியல் பொதிந்திருக்கிறது என்பதையும் அறிவித்திருக்கிறார். இக்கருத்தும் இரண்டு எழுத்துகளின் தொடர்பில் இங்கே நினைவுகொள்ளத் தக்கது.

இவ்விரண்டு (அ, ம்) எழுத்துகளும் பிறக்கும் முயற்சி யைத் தனித்தனியே கண்டுள்ளோம். அவற்றை இணைத்து நோக்குவோம்,

1. வாயைத் திறந்து ஒலியை உண்டாக்கின் தோன்றுவது - அ

2. அவ்வொலியொடு உதடுகளை இணைத்து மூடின்

- தோன்றுவது - 'ம்'

3. அவ்வொலியைத் தொடர்ந்து இணைந்த உதடுகளை o நெகிழ்த்தால் தோன்றுவது - ம’

தொடர்ந்து இவ்வொலிகளால் தோன்றுவது அம்ம’ தோன்றிய அம்ம’ நம்மைக் கேட்க வைக்கும் - கேட்பிக்கும். கேட்பிக்கும் 'அம்ம’ எளிய முயற்சியின் தோற்றம். எளிய முயற்சி யின் தோற்றம் என்பதற்கு மேல், இச்சொல் இயல்பாகத் தோன்று வது என்பதைக் குழந்தையைக் கொண்டு காண்போம். ---

- * * * பிறந்த குழந்தையை எழுப்பும் அழுகை உடற்_கூற்றின் ஒலி, கரையும் ஒலியாகும். இக்கரையும் இயல்பு. ஒலி வாயைத் திறந்த அளவில் தொடர்வது.

- குழந்தை பிறக்கும் முன், ஒலித்தல் செய்தி ராத தொண்டை தெளிவான ஒலியைத் தராது; கரைசல் ஒலியைத் தரும். (கம்மிய தொண்டையைக் கரைசல் தொண்ட்ை என்கிறோம்.) அவ்வொலிக்கு எழுத்துருவைக் கொடுக்க இயலாது. எவ்வகைப் பொருளும் அற்றது. இக்கரைதல், குழந்தை ஒலி,

1. கந்த புராணம் : சிங்க : 487 : 1, 2,