பக்கம்:புதையலும் பேழையும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

ஒரு

தமிழ்ச் சொல்.

'தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்'

- என்னும் தொடரில் பாரதியாரது உள்ளம் பளிச்சிடுகின்றது. இதன் கருத்தில் மிடுக்கு மட்டும் அன்று, மெய்மையும் ஒளிவிடு கின்றது, அம் மெய்மைக்கு முடிசூட்ட முனைந்த பாரதியார்,

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' - என்று தெளிவாகக் குரல் கொடுத்தார். அவர் குரலுக்கேற்பத் தமிழ்ச்சொல் உயர்வுடையதே. அவ்வுயர்வை எக்கோடியில், எக் கோணத்தில் நின்றும் காணலாம். இங்கு ஒரு கோணத்தில் நின்று காண்போம். - -

சொல்லில் நெல்.

நெல்லைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன. அவற்றுள் 'சொல்’ என்னும் சொல்லும் ஒன்று, நெல்லைக் குறிக்கும் சொற்

களாக வரி, சொல், விரீகி, சாலி, யவம்' என்பவற்றைச்

1 வரி சொல்லு விரிசி சாலி வளர்செந் நெல்லாம் யவமும் ஆகும்.'

- - சூடா, தி : மரப்பெயர் :38,