பக்கம்:புதையலும் பேழையும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதையலும்

"சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர'

-என்றார். சோற்றுக்குள் சொல். நெற்பயனால் ஆக்கப்படும் உணவைக் குறிக்கச் சொன்றி! என்று ஒரு சொல் உண்டு. தென்பாண்டி நாட்டார் சோற்றைச் சொன்றி என்றும்....வழங்குவர்' என்று நன்னூல் உரையாசிரியர் சொன்றி என்னும் சொல் திசைச்சொல் என்றார். நிகண்டுகள் யாவும் சோற்றைக் குறிக்கும் சொல்லாகச் சொன்றி'யைக் குறித்துள்ளன. இலக்கியங்கள் பலவும் இச் சொன்றி'யைப் பேசுகின்றன.

"இழிந்து ஆனாப் பல சொன்றி -என்பது மதுரைக்

காஞ்சி (212) 'சொன்றிப் பெருமலை தின்று' -என்பது கல்லாடம் - (10 : 19) புன்புல வரகின் சொன்றியொடு பெறுTஉம்' - என்பது புறம் ; (197 : 1.2)

நெல் முதலிய பிற பயிர்களிலிருந்து உருவாகும் உணவைக் குறிக்க அவற்றினும் சிறப்பாக அரிசிக் சோற்றைக் குறிக்க எழுந்த சொல்லாம் சொன்றி யில் சொல்' என்பது வேர்ச்சொல்லாக அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. சோற்றுக்குள்ளே சொல் ஒலிக்கிறது.

சொல் ஒரு விதை.

நெல் பயிர்; சொல்லையும் பயிராகக் கண்டனர் தமிழ்ச் சான்றோர். நிலத்தில் விதையை வித்தி நெல்லைப் பயிரிடுவது போன்றே செவியில் சொல்லைப் பெய்து பயன் விளைத்தனர்.

1 புறம் : 878 : 15. 2 நன் : 278 உரை. 3 'சொன்றி பாத்துக் கூழ் பதம் புகா சோறே'-பிங். நி; 1102

'சொன்றி நிமிரம் மடை கூழ் புழுக்கல் 'ஒன்றிய முரல் சோறெண உரைப்பர்'-சேந். தி: பல்பொருள்,

'சொன்றிய புன்கமொடு சருவசனம் "கண் கூழ் ஒதனம் புகாவே சோறாம்’-துடா, நி : 22.