பக்கம்:புதையலும் பேழையும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புதையலும்

புனலூரில் ஒரு விருந்துக் காட்சி. அவ்விருந்தும் ஒரு கூட்டாஞ்சோற்று விருந்து உணவை ஆக்குகின்றவர், படைக் கின்றவர், உண்கின்றவர், யாவரும் புலவர். இச்செயல்கள் மட்டு மல்ல. நிலத்தைப் பண்படுத்தி வயலாக்குகின்றவரும் அவரே. நீர் பாய்ச்சுகின்றவரும் அவரே. கலப்பைகொண்டு உழுகின்றவரும் அவரே. நெல்லை விளைத்துப் புதுச்சுவையோடு உணவாக்கு கின்றவரும் அவரே. கூடி உண்கின்றவரும் புலவரே,

இதில் ஒரு புதுமை, பயிர்த்தொழிலில் வளவயலை ஆக்கு தலும், நீர் பாய்ச்சுதலும், உழுதலும் முதலிய செயல்கள் வெவ் வேறு பருவத்தில் - காலத்தில் . நேரத்தில் நிகழ்பவை. ஆனால், இப்புலவர் செய்யும் உழவுத் தொழிலோ ஒரே நேரத்தில் அனைத்துச் செயல்களையும் கொண்டது.

புலவர்களது பண்படுத்தப்பட்ட வயல் ட செவி. ஆம், யாவரது செவிகளுமே வயல். கரம்பை செதுக்கிக் களர் ஒதுக்கித் தள்ளி, வயலைப் பண்படுத்துகின்றமை போன்று, வன்சொல் கேளாமல் செதுக்கி ஒதுக்கிப் பயனில் சொற்களைக் கேளாமல் களைந்து விலக்கிச் செப்பம் செய்யப்பட்டது புலவர்களது செவிகளாகிய வயல். ("செதுமொழி சீத்த செவி செறுவாக') முன்னையச் சான்றோர்தம் பொன்மொழிகளை வைத்து இப்புலவர்கள் பனுவல் பாடுகின்றார்கள். அம்முது மொழியே நீராகப் பாய்ச்சப்படுகின்றது. நல்ல நூல் களைப் பயின்ற அறிவுடை நாவே கலப்பை, அக் கலப்பைகொண்டு உழுகின்றனர். ('முதுமொழி நீரா புலன் நா உழவர்') புதுமை நயமும் சுவையும் திகழும் புதுமொழிகளாம் ஒன்பான் சுவை உணவைக் கூட்டி ஆர்வமுடன் உண்கின்றனர். இப்புலவர்கள் வாழும் ஊரின் பெயர் என்ன தெரியுமோ? புனலூர். ஊரின் பெயரும் வயலுக்கினிய நீர்-புனல் அமைந்த ஊர். ஊர் புனலாக இருந்தால் கரை வேண்டுமன்றோ? புனலூருக்குக் கரையாக அவ்வூரைக் கோட்டை மதில் சூழ்ந்துள்ளது. ("புதுமொழி கூட்டுண்ணும் புரிசை குழ்புனலூர்”)